வாட்ஸ் பார்வேட் செய்தி துளிகள்
🌾🌸இரவு 🗞 செய்திகள் 🌸🌾
🌾🌸04\03\17🌸🌾
🌾🌸இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்துக்கு தயாராகும் ஜெயங்கொண்டம்!
நெடுவாசலில் போராட்டம் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் குழாயில் புகை கசிந்ததால், அங்கேயும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
🌾🌸ஜியோவிற்கு எதிராக ஏர்டெல் அதிரடி....! அன்லிமிடெட் வாய்ஸ் கால் முற்றிலும் ப்ரீ ப்ரீ ...
ஜியோவின் அதிரடி சலுகையால் ஆடிப் போன , மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் , தற்போது ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல யுக்திகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது . அதன் முதல் கட்டமாக ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபேய்ட் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகையை அறிவித்து உள்ளது
ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இரண்டு புதிய திட்டங்கள்
ரூ.345 திட்டம்
1 ஜிபி டேட்டா
அன்லமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்கும் பொருந்தும்
வேலிடிட்டி - ஒரு மாதம்
மாதந்தோறும் இதே சலுகையை பயன்படுத்த வேண்டுமென்றால், இதே தொகையை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் . இந்த சலுகை ஒரு வருடத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
ரூ.145 திட்டம்
2ஜிபி டேட்டா,
ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
குறிப்பு
4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த திட்டம் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்
🌾🌸சவரன் ரூபாய் 22,576 ..!
சவரன் ரூபாய் 22,576 ..!
தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைya மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம் .
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் தங்கம் 1 கிராம் , 2 ஆயிரத்து 822 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
🌾🌸6 மாதங்களுக்குப் பின் விடிவு காலத்தைக் கண்ட அரசு திட்டங்கள்!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு சென்ற நாள் முதல் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டப்பணிகளை இன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்.
🌾🌸ரூ.3 கோடியையும், 3 கிலோ தங்கத்தையும் உதறியவர் செம்மலை.. ஓபிஎஸ் நெகிழ்ச்சி!
சென்னை: சசிகலா அணிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. அதை வேண்டாம் என்று உதறிவிட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தவர் செமமலை என்று ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
🌾🌸சசிகலாவை ஓடஓட விரட்டுவோம்.. மனோஜ் பாண்டியன் ஆவேச பேச்சு
சென்னை: அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர் என்றும் சசிகலாவை கட்சியில் இருந்து ஓடஓட விரட்டுவோம் என்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.

🌾🌸தமிழக பட்ஜெட்டின்போது எடப்பாடிக்கு ஆப்பு.. என்ன சொல்ல வருகிறார் மாஃபா?
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
🌾🌸அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பேரணியில் கல்வீச்சு.. வாரணாசியில் களேபரம்
லக்னோ: உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் அகிலேஷ் யாதவ் இணைந்து பங்கேற்ற தேர்தல் பேரணியின்போது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால் பதற்றம் நிலவியது.
🌾🌸எச்.1-பி ' விரைவு விசா ரத்து..அமெரிக்காவின் திடீர் உத்தரவால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி
'எச்.1-பி ' விரைவு விசா ரத்து..அமெரிக்காவின் திடீர் உத்தரவால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி
இந்திய உள்ளிட்ட பல்ேவறு நாடுகளைச் சேர்ந்த சாப்ட்வேர், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாக எச்.1-பி. விசாபெறும் முறையை ஏப்ரல் 3-ந் தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு நேற்று திடீரென அறிவித்தது.
இந்த உத்தரவால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வசிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
🌾🌸ஹைட்ரோ கார்பன்.. பொன்.ராதாகிருஷ்ணனுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு
மதுரை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
🌾🌸தெலங்கானாவை மிரட்டும் வெயில் கோடை காலத்தில் 40 டிகிரியை எட்டும்
ஐதராபாத்: தெலங்கானாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் இப்போதே கொளுத்துகிறது. அடுத்த வாரம் வெயில் 40 டிகிரியை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
🌾🌸மேயர் பதவிக்கு போட்டியிடவில்லை: பட்நாவிஸ்
மும்பை: மும்பை மாநகராட்சியில் மேயர் அல்லது துணை மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என மாநில முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் கூறியுள்ளார்.
🌾🌸சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி
செங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🌾🌸மத்திய அரசின் சாதனைகளை வெளியிட தயாரா?...பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் சவால்
மத்தியில் கடந்த 3 ஆண்டு கால பா.ஜனதா அரசின் சாதனைகளை வெளியிடத் தயாரா? என, பிரதமர் மோடிக்கு உ.பி. முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்தார்.
🌾🌸ஜி.எஸ்.டி. ஆலோசனை கூட்டத்தில் சட்டமுன் வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. சட்டமுன் வரைவை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
🌾🌸தாம் எடப்பாடி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு எம்.எல்.ஏ நட்ராஜ் மறுப்பு
சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவில் கலந்துகொண்டது பற்றி எம்.எல்.ஏ நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.மயிலாப்பூர் தொகுதி சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட்டதால் விழாவில் பங்கேற்றேன் என்று கூறியுள்ளார். விழாவில் பங்கேற்றதால் தாம் எடப்பாடி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு நட்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவர்களில் நட்ராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
🌾🌸மதுரை : காளவாசல் பகுதி பை-பாஸ் சாலை கூட்டுறவு ரேசன் கடை ஆய்வுக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவை மக்கள் முற்றுகையிட்டு பாமாயில் - பருப்பு 6 மாதம் எங்கே?- எனக் கேட்டதால் -பரபரப்பு - அதிகாரிகள் திகைப்பு
🌾🌸தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ரூ.2,247கோடி பயிர் இழப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் திட்டங்கள் தொடக்கம்:முதலமைச்சர்.
🌾🌸ரூ.1,375.95 கோடி மதிப்பில் 7 மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்ட கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
🌾🌸தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகனங்களையும், வணிகவரி, பதிவுத்துறை வாகனங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்
சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், திருவண்ணாமலை,வேலூர், கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் ₹1486.12கோடியிலான திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார்
🌾🌸தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் தொடக்கம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
🌾🌸மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை வெளியிட பாரிவேந்தர் பெயரை பயன்படுத்த பட தயாரிப்பாளர் மதனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு
🌾🌸நடிகை ஷன்ஜிதாஷெட்டி மறுப்பு ஷன்ஜிதா-வின் சமூகவலைதள பக்கத்தில், வெளியான புகைப்படத்தில் இருப்பது, நான் அல்ல - நடிகை ஷன்ஜிதாஷெட்டி மறுப்பு சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து,ஷன்ஜிதா -வின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக மூடல்.
🌾🌸உ.பி., 6-ம் கட்ட தேர்தல்: 57.03 % ஓட்டுப்பதிவு
உத்தர பிரதேச சட்டசபைக்கான 6-ம் கட்ட தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி, 57.03 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 6- ம் கட்ட தேர்தல் இன்று(மார்ச்-4) நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 57.03 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
🌾🌸மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்: 84% ஓட்டுப்பதிவு
மணிப்பூரில் இன்று நடந்த முதற்கட்ட ஓட்டுப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, 84 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று(மார்ச்,4) காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது.. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகின்ற 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. .
🌾🌸நடிகர் கமல் தமிழகம் முழுவதும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் முக்கிய வழக்கறிஞர்களை நாளை சென்னைக்கு வரவழைத்து முக்கிய ஆலோசனை செய்கிறார். தொடர்ந்து அரசியல் கருத்துகளை கூறி வரும் கமலின் இந்த ஆலோசனையால் நாளைய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
🌾🌸ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியான் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 90 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது
🌾🌸வால்பாறையில் பெண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் பெண் சிறுத்தைஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. டாடா காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று மர்மமானமுறையில் இறந்து கிடப்பதாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனச்சரக அலுவலர், வனப்பாதுகாவலர்கள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி ரொட்டிகடை பகுதியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறை கால்நடை மருத்துவர் உடல் கூறு பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும்.
🌾🌸நீட் தேர்வு விவகாரத்துக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்கிறார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை 8-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்த உள்ளார்.
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾

Comments
Post a Comment