வாட்ஸ்அப் பார்வேட் - செய்திகள் 8.3.17
🌾🌸இரவு 🗞 செய்திகள் 🌸 🌾🌸08\03\17🌸🌾
🌾🌸இன்று சர்வதேச மகளிர் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் வெல்ல முடியாத சக்தி; அவர்களின் அர்ப்பணிப்பு, மன உறுதிக்கு என்றும் தலை வணங்குகிறேன். பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு மற்றும் சமத்துவத்தை பேணிக்காப்பதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
🌾🌸மொபைல் பேங்கிங்... வங்கிக்கணக்குடன் ஆதார் எண் மார்ச் 31க்குள் அவசியம்- நிதி அமைச்சகம் ஆர்டர்
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இம்மாத இறுதிக்குள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு
அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
🌾🌸மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
'மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும்.' இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தரப்பு கூறியுள்ளது.
🌾🌸போபால் ரயிலில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். தீவிரவாதி முகமது சைபுல் கைது
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்தில் போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயிலில் நேற்று காலை குண்டுவெடித்து விபத்துக்குள்ளானது. மத்தியப் பிரதேச மாநிலம், தலைநகர் போபாலில் இருந்து, உஜ்ஜைனி நகருக்கு, பயணிகள் ரயில், நேற்று காலை சென்று கொண்டிருந்தபோது. ஜாப்டி ரயில் நிலையம் அருகே, குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், எட்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரயிலில் குண்டு வைத்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகிக்கப்படுகிற ஒருவர் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொருவர், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி முகமது சைபுல் என்பவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
🌾🌸பெங்களூரு சிறையில் சசிகலா காலில் விழுந்த கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி, வளர்மதி
பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்கப் போன சி.ஆர்.சரஸ்வதி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகியோர் அவரது காலில் விழுந்து கும்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
🌾🌸ஓரிரு நாளில் ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?
சென்னை: ஆர்.கே., நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை நிரப்ப பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🌾🌸ஜிஎஸ்டிக்கு நாங்க ரெடியாகலை...செப்.1ல் அமல்படுத்துங்கள் - இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு
டெல்லி: நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விதிப்பு ( ஜிஎஸ்டி) ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில் நாங்கள் இன்னும்
தயாராகவில்லை என்றும் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தலாம் என்று இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
🌾🌸பிரதமர் மோடி டையூ விமானம் நிலையம் வருகை
டையூ: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சோம்நாத் செல்கிறார். இதற்காக அவர் இன்று டையூ விமானம் நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சோம்நாத் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
🌾🌸நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்கள்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.
🌾🌸உலக அளவில் வெறும் 25 சதம்தான் டிஜிட்டல் பெண்கள்.. மகளிர் பற்றி என்ன சொல்கிறது ஐ.நா
1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடினர்.
அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு உறுதியோடு போராடி பெற்றுத் தந்த உரிமை தினமான இன்று உலக மகளிர் தினமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண்களின் நிலை என்ன என்று பெண்களுக்கான ஐ.நா. அமைப்பின் இயக்குனர்
🌾🌸உத்திர பிரதேசத்தில் தீவிரவாதி சுட்டுக்கொலை: துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல்
தாகுர்கஞ்ச்: உத்திர பிரதேசத்தில் தாகுர்கஞ்ச் என்ற இடத்தில் வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவர் நேற்று பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கிகள், கத்திகள் போன்ற பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
🌾🌸நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை... குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீசில் புகார்!
சென்னை: சன்டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
🌾🌸கொடைக்கானலில் லாரி கவிழ்ந்து விபத்து.. சிறுமி பலி.. 25 பேர் படுகாயம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மலையில் ஏறும் போது லாரி ஒன்று குப்புறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைப்பாதையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஓட்டுநர் நிலை தடுமாறியதால் லாரி கவிழ்ந்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
🌾🌸பெண்கள் மட்டுமே பயணிக்கும் விமானம்- ஏர் இந்தியா புது முயற்சி
டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம், இன்று ஏர் இந்தியா நிறுவனத்தில் அயரது உழைத்து வரும் பெண்களை கவுரப்படுத்துகிறது.பெண் ஊழியர்களை தனி விமானத்தில் இலவசமாக ஆக்ராவிற்கு அழைத்து செல்கிறது.
🌾🌸பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 8) துவங்கியது.இன்று முதல் மார்ச் 30 ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதுகின்றனர். 43,824 பேர் தனித்தேர்வாக எழுத உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3,371தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
🌾🌸குடியாத்தம் அருகே வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிப்பல்லி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சசிகுமார்(25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆப்செட் பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்றிரவு சாப்பிட்டு விட்டு சுமார் 11.30 மணியளவில் நண்பர்களை சந்திப்பதாக கூறிவிட்டு சசிகுமார் வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சசிகுமாரை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த சசிகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
🌾🌸டெல்லியில் மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி சிறுவன் பலி: தொழிலதிபர் கைது
டெல்லி: டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற 17 வயது சிறுவன் வேகமாக சென்று மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய தொழிலதிபர் சவ்நீத் சிங் எனபவர் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
🌾🌸ஜெ.மரணத்தில் நீடிக்கும் மர்மம்: நீதி விசாரணைக்கோரி ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம்!!
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தக்கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சென்னை உட்பட 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
🌾🌸அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ் எங்கே தங்கப்போகிறார்? பரபரப்பு தகவல்கள்
சென்னை: அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வீட்டின் அருகே குடிபெயர உள்ளார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் அவர் தங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🌾🌸பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவக்கம்
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று (மார்ச் 08) துவங்குகின்றன.இன்று துவங்கி மார்ச் 30 ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 பேர் தனித்தேர்வவு எழுத உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3371தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
🌾🌸திருமண விழாவில் துயரம்: லாரி கவிழ்ந்து 25 பேர் காயம்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே திருமண விழாவிற்கு சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கொடைக்கானல் அருகே உள்ள மூலையாறு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக மக்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரியில் பயணம் செய்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🌾🌸உண்ணாவிரதத்தை துவக்கினர் ஓபிஎஸ் அணியினர்
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீதிவிசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று (மார்ச் 08) தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.காலை 9 மணிக்கு துவங்கி உள்ள இந்த உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
🌾🌸சென்னை தண்டயார்பேட்டையில் மருந்து குடோனில் தீ விபத்து
சென்னை தண்டயார்பேட்டையில் உள்ள மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
🌾🌸திருப்பத்தூர் அடுத்த புளியங்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பவரது மகள் செந்தமிழ்செல்வி திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் கணவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை ராஜவேல் ஜோலார்ப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்
🌾🌸திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மூலையூர் என்ற கிராம சாலை கடந்த 3 நாட்கள் பெய்த தொடர் மழைக்கு சாலை பெயர்ந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு..
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾

Comments
Post a Comment