சிவ புராணம் ; ஓம் நம சிவாய
சிவபுராணம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 1 பதிவிறக்கம் செய்ய உரை வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! 2 பதிவிறக்கம் செய்ய உரை ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 3 பதிவிறக்கம் செய்ய உரை சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்: கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இற...