பொங்கல் சிறப்பு கவிதை- கவிஞர் வாலிதாசன்
அன்போடு வளர்ந்த இனம்
அடக்க நினைத்தால்
அத்துமீறி அழிக்கும் குணம்
யாவரையும் சொந்தமாக
நினைத்தோமே
யாவராலும் ஒடுக்கப்பட்டு
நிக்கோமே
தமிழா - ஒரு நொடி
தமிழா
தமிழா - உன் குடி
தமிழா
தமிழனுக்கெதிரா எச்சரிக்கை-
நாள்தோறும் போலி சுற்றறிக்கை;
வந்தபடி இருக்குதே - வசதியா
தந்தபடி இருக்குதே-
எம் மனக்கழுத்தை நெருக்குதே-
நெஞ்சழுத்தத்தில் சுருக்குதே;
வரைமுறை யறிந்தவனே-
பரம்பரை குணம் தெரிஞ்சவனே;
ஐம்பெரும் நிலத்தில் வாழ்ந்த இனம்-
அறத்தை மூச்சாய் நினைத்த இனம்;
சோறு கொடுக்கற சாமியடா-
பேரு எடுக்கற காளையடா;
மாட்ட அடக்குற கூட்டமடா-
காட்ட செழிக்குற வாட்டமா?
பிள்ளையப்போல்
வளர்க்குறம் காளை-
அது எங்க உசுருக்கும் மேல;
நடுவீட்டிற்குள் நுழைஞ்ச
நாயைப் போல-
நாட்டுக்குள் பீட்டா வேல;
வஞ்சகனும் இருக்கிறான்
கொஞ்சமேனும்
சூடு சுரணை இருக்குதா?
பக்கத்து மாநிலத்தான்
வக்கத்து போனதால வாலாட்டறான்-
கேரளம் மாநிலத்தான்
சோரம் ஆனதால காலாட்டறான்;
தமிழா - இது உன் மொழி
தமிழா
தமிழா - ஒரு நொடி
தமிழா
எங்கள் நிலத்தில் வந்து
நரிகளின் சத்தமா?-
எங்கள் நிலத்தில் எருதுவிடல் என்ன குத்தமா?
தவறவிடாதே இந்த தலைமுறை-
அந்த பழிவரும் எத்தனை தலைமுறை;
இது யார் விரித்த வலை-
அதை கிழிக்கக் கொடுப்போம் கோடி தலை;
கவிஞர் வாலிதாசன்.
அடக்க நினைத்தால்
அத்துமீறி அழிக்கும் குணம்
யாவரையும் சொந்தமாக
நினைத்தோமே
யாவராலும் ஒடுக்கப்பட்டு
நிக்கோமே
தமிழா - ஒரு நொடி
தமிழா
தமிழா - உன் குடி
தமிழா
தமிழனுக்கெதிரா எச்சரிக்கை-
நாள்தோறும் போலி சுற்றறிக்கை;
வந்தபடி இருக்குதே - வசதியா
தந்தபடி இருக்குதே-
எம் மனக்கழுத்தை நெருக்குதே-
நெஞ்சழுத்தத்தில் சுருக்குதே;
வரைமுறை யறிந்தவனே-
பரம்பரை குணம் தெரிஞ்சவனே;
ஐம்பெரும் நிலத்தில் வாழ்ந்த இனம்-
அறத்தை மூச்சாய் நினைத்த இனம்;
சோறு கொடுக்கற சாமியடா-
பேரு எடுக்கற காளையடா;
மாட்ட அடக்குற கூட்டமடா-
காட்ட செழிக்குற வாட்டமா?
பிள்ளையப்போல்
வளர்க்குறம் காளை-
அது எங்க உசுருக்கும் மேல;
நடுவீட்டிற்குள் நுழைஞ்ச
நாயைப் போல-
நாட்டுக்குள் பீட்டா வேல;
வஞ்சகனும் இருக்கிறான்
கொஞ்சமேனும்
சூடு சுரணை இருக்குதா?
பக்கத்து மாநிலத்தான்
வக்கத்து போனதால வாலாட்டறான்-
கேரளம் மாநிலத்தான்
சோரம் ஆனதால காலாட்டறான்;
தமிழா - இது உன் மொழி
தமிழா
தமிழா - ஒரு நொடி
தமிழா
எங்கள் நிலத்தில் வந்து
நரிகளின் சத்தமா?-
எங்கள் நிலத்தில் எருதுவிடல் என்ன குத்தமா?
தவறவிடாதே இந்த தலைமுறை-
அந்த பழிவரும் எத்தனை தலைமுறை;
இது யார் விரித்த வலை-
அதை கிழிக்கக் கொடுப்போம் கோடி தலை;
கவிஞர் வாலிதாசன்.
மிகச் சிறப்பான உணர்ச்சி மிக்க படைப்பு. வாழ்த்துகள்
ReplyDeleteநட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை