பொங்கல் சிறப்பு கவிதை - கல்விசிறகுகள் ஆர்.கே
எண்ணாமல் இருந்த பேரும்,
ஓய்வையே மறந்த பேரும்,
உண்ணாமல் இருந்த பேரும்,
உறங்காமல் உழைத்த பேரும்,
கண்ணான கல்விதனை கற்றுத்தந்து
காலத்தை வென்ற பேருமான
ஆசிரிய நண்பர்களுக்கு,
வணக்கம்.
வண்டெனப் பறந்து,
வாலிபர் உலகில்
தொண்டு புரிந்திட்ட
தூயவனாம் தமிழ்மகனின் தலைநன்னாளாம்,
திங்கள் பன்னிரண்டு திகழும் ஆண்டில் ஓரெழுத்தால் உயர்ந்து நிற்கும் தை முதல்நாள்.
இன்னனாளிலே . .......
புதுப்பானை புதியகோலம்
புது மஞ்சள்
புது காய்கள்
புத்தரிசி
இவைகொண்டு,
தித்திக்கும் தீங்கரும்பின்
துணையுடன்,புத்தாடை கட்டி,
நன்னெறி வளர்த்து
நற்பயன் செய்து
உள்ளத்தால் பொய்யாது,
உயர்நிலை நின்று,
ஒழுக்கத்தால் பிறர்போற்றும் உயர்வாழ்க்கை வாழ்ந்து,
சீர்பெற உழைத்து சிறப்புடன் வளர்ந்து,
மலரினும் மென்மையாய்,
வானினும் தூய்மையாய்,
நிலையினிற் செம்மையாய்,
நினைவினிற் பசுமையாய்,
தொலைவழி போயினும் தோன்றிடும் இன்பமாய்
கொண்டாடுவோம் இத்தைத் திருநாளை.
கவலைகள் கழிந்து
புன்னகைகள் புகுகின்ற,
உழவர்களால் ஆன திருநாளாம்,
உழவர்களுக்கான திருநாளாம் இன்னன்னாளிலே
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
அர. கார்த்திகேயன். ஆசிரியர்
கல்விசிறகுகள்..
ஓய்வையே மறந்த பேரும்,
உண்ணாமல் இருந்த பேரும்,
உறங்காமல் உழைத்த பேரும்,
கண்ணான கல்விதனை கற்றுத்தந்து
காலத்தை வென்ற பேருமான
ஆசிரிய நண்பர்களுக்கு,
வணக்கம்.
வண்டெனப் பறந்து,
வாலிபர் உலகில்
தொண்டு புரிந்திட்ட
தூயவனாம் தமிழ்மகனின் தலைநன்னாளாம்,
திங்கள் பன்னிரண்டு திகழும் ஆண்டில் ஓரெழுத்தால் உயர்ந்து நிற்கும் தை முதல்நாள்.
இன்னனாளிலே . .......
புதுப்பானை புதியகோலம்
புது மஞ்சள்
புது காய்கள்
புத்தரிசி
இவைகொண்டு,
தித்திக்கும் தீங்கரும்பின்
துணையுடன்,புத்தாடை கட்டி,
நன்னெறி வளர்த்து
நற்பயன் செய்து
உள்ளத்தால் பொய்யாது,
உயர்நிலை நின்று,
ஒழுக்கத்தால் பிறர்போற்றும் உயர்வாழ்க்கை வாழ்ந்து,
சீர்பெற உழைத்து சிறப்புடன் வளர்ந்து,
மலரினும் மென்மையாய்,
வானினும் தூய்மையாய்,
நிலையினிற் செம்மையாய்,
நினைவினிற் பசுமையாய்,
தொலைவழி போயினும் தோன்றிடும் இன்பமாய்
கொண்டாடுவோம் இத்தைத் திருநாளை.
கவலைகள் கழிந்து
புன்னகைகள் புகுகின்ற,
உழவர்களால் ஆன திருநாளாம்,
உழவர்களுக்கான திருநாளாம் இன்னன்னாளிலே
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
அர. கார்த்திகேயன். ஆசிரியர்
கல்விசிறகுகள்..
Comments
Post a Comment