பொங்கல் சிறப்பு கவிதை - தோழர் செல்வ.ரஞ்சித்
🌞🐮🌾🌞🐮🌾🌞🐮🌾
பெயரீற்றில் பால் விகுதியற்று
ஸ்ரீயும் ஜீயும் உயர்வென்றும்
ஷ்சும் ஸ்சும் அழகென்றும்
பிறப்பிலே இரக்கத் தொடங்கி
பொருளற்ற பெயர் சூட்டி
கனியிருக்கக் காய்கவர்ந்தோம்!
பெற்றோர் உற்றாரை அழைத்திட
பேசிப் பழகி மகிழ்ந்திட
அயல்மொழியே சிறப்பு என்றும்
ஆங்கிலமே அறிவு என்றும்
தாய்மொழியை மொழிய மறுத்து
செவிலியிடம் சிறையானோம்!
ஏர்முனை பலம் கூட்டாது
ஏறுகளின் நலம் பேணாது
இயற்கை உழவ(வி)னை மதியாது
செயற்கை உரத்தைச் சேற்றாக்கி
செர்சியின் மடிநீரைப் பாணமாக்கி
நோயுற்று நோவானோம்!
தானிய உணவைத் தரமறுத்து
விந்தில்லா விதை விதைத்து
விளையும் நிலத்தையும் பாழாக்கி
தரணியின் கழிவினைத் தரமென்று
பீசா-லேசே பெருமை என்று
பிஞ்சுவெம்ப மலடானோம்!
மொழியொழித்து இனமழிக்க
இந்தியமும் நடிக்கிறது . . .!
செயற்கையளித்து அடிமையாக்க
இன்னலுலகம் துடிக்கிறது . . .!
*இயற்கையோடே மொழியுயர்த்தி*
*இனந்தழைக்க முடிவெடு!*
இனத்தின் மொழியும்
இந்நாளில் மொழிகிறது. . . .,
இனமும் மொழியும்
*தமிழே என்று!*
இனத்தின் புதுநாள்
*தைமுதலே என்று!*
இயற்கை உழவாலும்
சர்க்கரைப் பொங்கலாலும்
செங்கரும்புச் சாறாலும்
சுற்றஞ்சூழ் நட்பாலும்
இனிமையை நாமுண்டு
இளமையைத் தமிழுக்கூட்டுவோம்!
*தமிழ்ப் புத்தாண்டு*
மற்றும்
*தைப் பொங்கல்*
_நல்வாழ்த்துகளுடன்,_
செல்வ.ரஞ்சித்குமார்,
இடைநிலை ஆசிரியன்,
வட்டாரச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி வட்டாரம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
பெயரீற்றில் பால் விகுதியற்று
ஸ்ரீயும் ஜீயும் உயர்வென்றும்
ஷ்சும் ஸ்சும் அழகென்றும்
பிறப்பிலே இரக்கத் தொடங்கி
பொருளற்ற பெயர் சூட்டி
கனியிருக்கக் காய்கவர்ந்தோம்!
பெற்றோர் உற்றாரை அழைத்திட
பேசிப் பழகி மகிழ்ந்திட
அயல்மொழியே சிறப்பு என்றும்
ஆங்கிலமே அறிவு என்றும்
தாய்மொழியை மொழிய மறுத்து
செவிலியிடம் சிறையானோம்!
ஏர்முனை பலம் கூட்டாது
ஏறுகளின் நலம் பேணாது
இயற்கை உழவ(வி)னை மதியாது
செயற்கை உரத்தைச் சேற்றாக்கி
செர்சியின் மடிநீரைப் பாணமாக்கி
நோயுற்று நோவானோம்!
தானிய உணவைத் தரமறுத்து
விந்தில்லா விதை விதைத்து
விளையும் நிலத்தையும் பாழாக்கி
தரணியின் கழிவினைத் தரமென்று
பீசா-லேசே பெருமை என்று
பிஞ்சுவெம்ப மலடானோம்!
மொழியொழித்து இனமழிக்க
இந்தியமும் நடிக்கிறது . . .!
செயற்கையளித்து அடிமையாக்க
இன்னலுலகம் துடிக்கிறது . . .!
*இயற்கையோடே மொழியுயர்த்தி*
*இனந்தழைக்க முடிவெடு!*
இனத்தின் மொழியும்
இந்நாளில் மொழிகிறது. . . .,
இனமும் மொழியும்
*தமிழே என்று!*
இனத்தின் புதுநாள்
*தைமுதலே என்று!*
இயற்கை உழவாலும்
சர்க்கரைப் பொங்கலாலும்
செங்கரும்புச் சாறாலும்
சுற்றஞ்சூழ் நட்பாலும்
இனிமையை நாமுண்டு
இளமையைத் தமிழுக்கூட்டுவோம்!
*தமிழ்ப் புத்தாண்டு*
மற்றும்
*தைப் பொங்கல்*
_நல்வாழ்த்துகளுடன்,_
செல்வ.ரஞ்சித்குமார்,
இடைநிலை ஆசிரியன்,
வட்டாரச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி வட்டாரம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
Comments
Post a Comment