முதல் வெற்றி
ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் : முதல்வர் அறிவிப்பு
புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும். ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
டில்லியில் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார். இதன் அடிப்படையில், நேற்று டில்லியிலேயே தங்கி இருந்து, மிருக வதை தடை சட்டத்தின் கீழ் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மிருக வதை தடை சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, அவசர சட்டத்தை தமிழக அரசே பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அவசர சட்டவரைவு கொண்டு வந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பின்னர் கவர்னரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் இயற்றப்படும்.
அவசர சட்டத்திற்கான சட்ட வரைவு தயாராக உள்ளது. அது தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள் ஜனாதிபதிக்கு அதனை அனுப்பி வைத்து, ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள். ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொது மக்கள், இதர பிரிவினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment