ஜல்லிகட்டு நிரந்தர தீர்வு - இதுவே வெற்றி
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும்: மார்க்கண்டேய கட்ஜு
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டம் பிறக்கப்பிட்ட பிறகும் கூட இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் போதாது. அதை நிரந்தர சட்டமாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ''அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்'' என்று முதல்வர் ஓபிஎஸ் உறுதி கூறியுள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில், ''ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment