வாட்ஸ் அப் பார்வேட் -
*🔵🔴இரவு செய்திகள்@10/1/17🔴🔵*
🔴தொழில் உற்பத்தித் துறையில் உலக நாடுகள் வரிசையில் 6-ம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம் : பிரதமர் மோடி
🔴ஜனநாயகம் நம்முடைய முக்கிய பலம் எனவும் நம்முடைய இளைய சமுதாயமே முக்கிய மூலதனம் என குஜராத்தில் நடைபெற்று வரும் 8-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
🔴இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது-- பிரதமர் மோடி
🔴கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
🔴தமிழகத்தில் பொங்கல் திருநாளின் போது ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அதிமுக எம்பிக்கள் நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
🔴51 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை அரசு.அனைவரும் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த மீனவர்கள்.இவர்கள் பத்திரமாக காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
🔴13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வைகோ தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மேலும் தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும் கூறியுள்ளது. மேலும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து ஜன. 31-க்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் உத்தரவு அளித்துள்ளது.
🔴தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
🔴தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொங்கலுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். திருவள்ளுவர் திருநாளையும் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
🔴தமிழக மக்களின் கவலை குறித்து மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது.ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது -மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே
🔴ரூ.2,480 கோடி இழப்பீடு கேட்டு தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
🔴பொங்கல் திருநாளை விருப்ப விடுமுறையாக அறிவித்ததை மத்திய அரசை திரும்ப பெற்று விட்டதால், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நாளை (11-1-2017) சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் மத்திய அரசை கண்டித்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது
🔴ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
🔴நாகூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
🔴சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் உலக பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காரைக்குடி அருகே உள்ள மக்கள் சிராவயல் மஞ்சுவிரட்டு மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
🔴லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கும் என பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
🔴விவசாயிகளின் தற்கொலை விஷயத்தில் மெத்தனமாக இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் மே 17 இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
🔴பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை: ராமதாஸ்
🔴தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
🔴கர்ப்பிணிப் பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையைச் சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன்- செல்லம்மாள் தம்பதிக்கு தூக்குத் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
🔴அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கிண்டலடித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் இயக்குனர் மனோபாலா வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக அவர்மீது போயஸ் கார்டன் , தலைமை கழகம் , காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக அதிமுக பிரமுகர் கூறியுள்ளார்.
🔴டோக்கன் கொடுத்துவிட்டு பணம் கொடுக்காததால் ஆத்திரம்: திருவள்ளுர் மாவட்டம், ஆவடி எச்.வி.எப். சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
🔴கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
🔴பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் செல்லாது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது. ரெட் பஸ் இணையதளம் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஆம்னி பேருந்தில் அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ல் இருந்து 17 வரை ரெட் பஸ்ஸில் டிக்கெட் வாங்கியது செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் பஸ் இணையதளம் மூலம் டிக்கெட் வாங்கிய பயணிகள் திருப்பி கொடுத்து பணத்தை பெற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வாங்கமுடியாத பயணிகள் நேரில் சென்று டிக்கெட் பெற வலியுறுத்தபட்டுள்ளது.
🔴ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.
🔴அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தேதியை மாற்றத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிவித்தப்படி பிபரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
🔴சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு கட்சியின் முன்னாள் எம்பி, செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
🔴தடையை மீறி, வரும் 25-ஆம் தேதிக்குள் சபரிமலைக்கு செல்வது உறுதி என பெண்ணிய செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
🔴பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சுமார் 60 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் செல்லாத நோட்டு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
🔴நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
🔴ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியான கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வங்கிக்கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔴சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இன்று வழக்கு தொடர்பாக முக்கிய விசாரணை நடைபெற்றதாக தகவல்
🔴நான் அதிகாரம் இல்லாத ஆளுநராக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
🔴மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்த மத்திய பிரதேச அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், 13 ஆயிரம் கிராமங்களில் வைபை வசதியை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔴மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஹிமாலயலன் ரயில்வேயின் சுற்றுலா பூங்கா ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
🔴ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய செயலியை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு அறிமுகப்படுத்தினார். ஐஆர்சிடிசி புதிய செயலியில் டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இடம் பெற்றுள்ளன.
🔴இனிமேல் விபத்தினால் சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்தால், அவர்களுக்கு 2,000 ரூபாய் பரிசுத் தொகை. வெறும் பணம் மட்டுமில்லை; அவர்களுக்கு டெல்லி அரசின் சார்பாக 'சிறந்த குடிமகன்' சான்றிதழும் வழங்கப்படும். இது போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று அறிக்கை விடுத்திருக்கிறார், டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிஷோதியா
🔴டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சிசோடியா பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் மறைமுகமாக பேசியுள்ளார். கெஜ்ரிவாலை முதல்வராக கருதி வாக்களிக்குமாறு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
🔴நாட்டில் தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால் கள்ள நோட்டுகள் உருவாக வாய்ப்பு அளிக்கப்பட்டு விடும். ஆதலால், எதிர்காலத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சாமியார் பாபா ராம்தேவ் வினோத கோரிக்கை எழுப்பியுள்ளார்.
🔴தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
🔴ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர்.
🔴ஆப்கனிஸ்தான் நாட்டில் காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் அருகிலும், நூர் மருத்துவமனை அருகிலும் குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
🔴பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்கிழக்கு பகுதியில் ஜோலோ என்ற இடத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔴22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,767
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,136
24 கேரட் தங்கம் 8 கிராம் - ரூ.23,160
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.60
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.40,760
🔴தற்போது உலக கோப்பை போட்டியில் 32 நாடுகளின் அணிகள் மட்டுமே விளையாடுகிறது.இனி விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை 48ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விரிவான தகவல்களை FIFA பின்னாளில் வெளியிடும்.

Comments
Post a Comment