வாட்ஸ் அப் ஃபார்வேட்- செய்தித்துளிகள் 3.1.17
📡📻இரவு 📰 செய்திகள் 📻📡
📡📻03\01\17📻📡
📡பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் பரிசுத்தொகுப்பை அறிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி ஏலக்காய், 2அடி நீள கரும்பு துண்டு, உலர்திராட்சை அடங்கும் பரிசுத்தொகுப்பு 80 லட்சம் பயனாளிகளுக்கு கிடைக்கும் என அறிவிப்பு
📻புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி(42) உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡பணமில்லா பரிவர்த்தனை: எய்ம்ஸ் மருத்துவமனை மொபிவிக் வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
டெல்லி: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மொபிவிக் வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை அறிவித்து வருகிறது. இந்நிலயில் புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் அந்த திட்டத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
📻கொல்கத்தாவில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல்
கொல்கத்தா: சுதீப் பந்தோத்பாத்யாய் கைதை கண்டித்து பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சீட்டு கம்பனி மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதீப்பை சி.பி.ஐ கைது செய்தது.
📡வரும் 5ம் தேதி அமைதி பேரணி நடத்த சசிகலா அனைத்து மாவட்ட அ.தி.மு.க.வினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துச் செல்லும் விதமாக பதாகைகளுடன் ஊர்வலம் நடத்தப்படும்.இதற்கான ஏற்பாடுகள் தூரிதமாக நடந்து வருகின்றன.
📻சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எனது அம்மா போன்றவர் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
📡முன்னாள் அமைச்சர் வெடிகுண்டு வீசி கொலை... புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி:முன்னாள் அமைச்சர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் மற்றும் சபாநாயகராக இருந்த வி.எம்.சி சிவகுமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.திமுக ஆட்சியின் போது அமைச்சராகவும் பின்னர் சபநாயகராகவும் இருந்தவர்தான் வி.எம்.சி.சிவகுமார்.
📻நிர்வாணமாக திரிவது பெண்கள் மத்தியில் கலாசாரமாகி வருவதால், பெங்களூருவில் மானபங்கபடுத்தப்பட்டதாக சமாஜ்வாதி எம்.பி., அபு ஆஸ்மி கூறியுள்ளார்.
📡அமைச்சர் காமராஜுக்கு அருகதை இல்லை.. வெளுத்து வாங்கும் எவ.வேலு
ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்
📡அரசியலில் இருந்து ஓய்வு.. அறிவித்தார் நாஞ்சில் சம்பத்!
சென்னை: அரசியலை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாக, அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழ் செய்தி சேனலான 'புதிய தலைமுறைக்கு' அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
📻அதிமுகவில் நான் இணைய ஓபிஎஸ் தான் காரணம்: நாஞ்சில் சம்பத் பொளேர்
சென்னை: அதிமுகவில் நான் இணைய தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
📡ஒரே மாதத்தில் 66 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி - அதிர்ச்சியில் அமலாக்கத்துறை
நவம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் 66 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான கருப்புபணம் தங்கமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமலாக்கப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
6,200 கிலோ
இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் 6,200 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
📻பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத திருநங்கைகளுக்காக கேரளாவில் ஒரு பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. 'சஹாஜ்' எனப்படும் அந்தப் பள்ளியில் இதுவரை 6 திருநங்கைகள் சேர்ந்துள்ளனராம். இந்தியாவில் சுமார் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்
📡முடிவுக்கு வருது சமாஜ்வாதி 'சீரியல்'?
லக்னோ: சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் முலாயமுக்கும் அகிலேசுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
📻கடந்த ஆண்டு பிரேசில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. அவருக்கு ஹைதராபாத்தில் 9,000 சதுர அடி மனையை வழங்கியுள்ளது தெலங்கானா அரசு.
📡தம்பித்துரையின் தத்துவம் இந்திய ஜனநாயகத்தில் இல்லாதது: இளங்கோவன் கருத்து
சென்னை: கட்சி தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருப்பது அவரின் தத்துவம். இந்திய ஜனநாயகத்தில் அப்படி எந்த சட்டமும் இல்லை என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
📻இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலர் அஜய் ஷிர்கேயை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஒரு மனுவை வரும் 19ம் தேதி விசாரிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்
📡விவசாயிகள் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? விஜயகாந்த் காட்டம்
சென்னை: விவசாயிகளுடைய பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக முதல்வரோ அல்லது வேளாண்மைத்துறை அமைச்சரோ பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள விவசாயிகளுடைய குறைகளை கேட்டறிந்து, பாரத பிரதமரை நேரில் சென்று சந்தித்து விவசாயிகளுனுடைய பிரச்சனையை முழுமையாக தீர்வு காண ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
📻2016-17ல் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தினமும் ரூ.14 கோடிக்கும் மேல் இழந்து வருவது தெரிய வந்துள்ளது. விலை குறைப்பு, அதிக செலவு உள்ளிட்ட காரணங்களால் இந்த இழப்பு. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது ஃப்ளிப்கார்ட்
📡டெல்லியில் கடும் பனிமூட்டம் : 112 விமானங்கள் தாமதம்
டெல்லி : டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 112 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. மேலும் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவுடன் குளிரும் மக்களை வாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
📡தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்: அமைச்சர் வேலுமணி விளக்கம்
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வாரிய அலுவலகத்தில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாட்டில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து இன்னும் இரு தினங்களில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
📻மணிப்பூர் முதல்வரை எதிர்த்து இரோம் சர்மிளா போட்டி
இம்பால்: மணிப்பூரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து இரோம் சர்மிளா போட்டியிடுகிறார். மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு ஆயுத படை சட்டத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இரோம் சர்மிளா உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட இரோம் சர்மிளா, தேர்தலில் போட்டியிட்டு முதல்வராவேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் புதிதாக கட்சி ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இந்த சூழலில், தேர்தலில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட போவதாக இரோம் சர்மிளா அறிவித்துள்ளார்.
📡உ.பி. தேர்தல் களத்தில் ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்த மாட்டோம் வெங்கய்ய நாயுடு
எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் ராமர் கோயில் விவகாரத்தை பாஜக முன்னிறுத்தாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
📻எச்.டி.எப்.சி., மற்றும் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் வட்டி குறைப்பு
புதுடில்லி: எச்.டி.எப்.சி., மற்றும் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் குறைத்தன.
📡சிலிண்டர்களை ஆன்லைனில் பதிவு செய்தால் தள்ளுபடி
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்துக்குப்பிறகு, கேஷ்லெஸ் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில், பதிவு செய்து, பணம் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
📻ஓ.பி.எஸ். தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில், வறட்சி, விவசாயிகளின் தொடர் மரணம், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 2017 -18 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
📡சிட்பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுதிப் பந்தோபாத்யாய் கைது
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுதிப் பந்தோபாத்யாயை ரோஸ் வாலி சிட்பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது. ஊழல் பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📻அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகளாக பதிவு
அசாம் மாநிலத்தில் இந்திய வங்கதேச எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகளாக இது பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
📡ஜனவரி 5ல் நடக்க இருந்த விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு: பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு
ஜனவரி 5ல் நடக்க இருந்த விவசாயிகள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறினார். மாநில அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்துள்ளார். வறட்சியை சமாளிக்க நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது என்று சென்னையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிய பின் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
📻சேகர் ரெட்டி, சீனிவாசலு ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமாருக்கு ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡40% பணத்தை கிராமப்புற கிளைகளுக்கு கொடுக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு
40% பணத்தை கிராமப்புற கிளைகளுக்கு கொடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பதில்லை என எழுந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
📡வறட்சி பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
📻தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: கருணாஸ் பேட்டி
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என சென்னையில் பேட்டியளித்த கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்
📡தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த த.மா.கா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். சசிகலா விவகாரம் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனை என வாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி வரும் 7ம் தேதி அலங்காநல்லூரில் த.மா.கா ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வாசன் தெரிவித்துள்ளார்.
📻விஞ்ஞானிகள் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும்: திருப்பதியில் மோடி பேச்சு
தேசிய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். விஞ்ஞானிகள் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். சீர்குலைப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அறிவியல் தொழிநுட்பம் இருக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார். நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
📡மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
சென்னை தரமணியில் மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. பொறியாளர் பிரபாகரன் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
📻மேற்குவங்க மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து 6 பேர் உயிரிழப்பு
மேற்குவங்க மாநிலம் புர்த்வான் என்ற இடத்தில் விஷ சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📡ஆம்பூர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட துப்பாக்கி ஆலை கண்டுபிடிப்பு
ஆம்பூர் அடுத்த கீழ்கொத்தூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த துப்பாக்கி ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையிலிருந்து 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் துப்பாக்கி தயாரித்ததாக ரஜினி, பெரியசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📻அகஸ்டா வெஸ்ட்லாண்ட் விவகாரம்: எஸ்பி.தியாகி ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி எஸ்பி.தியாகி ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை ஜனவரி9 ம் தேதி டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்ததது.
📡104வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
104வது இந்திய அறிவியல் மாநாடு திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
📻சிவாஜி சிலை மே18க்குள் மாற்றப்படும்: தமிழக அரசு
சென்னை மெரினாவில் உள்ள சிவாஜி சிலை மே18க்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
📡5 மாநில தேர்தல் தேதி நாளை அறிவிப்பு
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
📡📻📡📻📡📻📡📻📡📻📡

Comments
Post a Comment