வாட்ஸ் அப் வரவு - 2.7.17
📡📺இரவு📺செய்திகள்
📺தம்பித்துரை லெட்டர் பேடில் அறிக்கை விட்டதைத் தவிர்த்திருக்கலாம்: வெங்கையா நாயுடு
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் .
சசிகலா முதல்வராக வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை லெட்டர் பேடில் அறிக்கை விட்டதைத் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு கூறினார்.
📡இனி பழைய போன்களில் வாட்ஸ் - அப் கிடையாது" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பழைய ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆன்ட்ராய்ட் 2.2 பிரோயோ, பழைய ஆன்ட்ராய்ட் போன்கள், ஐபோன் 3 ஜிஎஸ், குறைந்த வெர்சன் கொண்ட 7 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல விண்டோஸ் 7 வெர்சன் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " ஆன்ட்ராய்ட் 2.2 மற்றும் அதற்கு குறைவான வெர்சன்கள், ஆப்பிள் 3ஜிஎஸ், 2.6 வெர்சன், வின்டோஸ்7 ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
📡புதுச்சேரியில் அரசு தகவல்களை 'வாட்ஸ் அப்'பில் அனுப்ப தடை
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை 'வாட்ஸ் அப்'பில் அனுப்ப தடை விதிக்கப்பட்டடுள்ளது. அதிகாரி சஸ்பெண்ட் சில தினங்களுக்கு முன்னர், புதுச்சேரி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதுச்சேரி கவர்னர் இடம்பெற்று இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச செய்தியை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தடை இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப கூடாது என தலைமை செயலர் மனோஜ் பரீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
📺மெரினாவில் பைக் ரேஸ்.. பத்து பேர் கைது
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
புத்தாண்டு அன்று பைக் ரேசில் ஈடுபடுபட்டதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இந்நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவில் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை சிலர் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது, சிலரை போலீசார் துரத்தியபோது, அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம், குறிப்பிட்ட வாகனங்களின் பதிவெண்களைக் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து 4 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 10 பேரை அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் இன்று கைது செய்தனர்.
📡திருவல்லிக்கேணி அதிமுக பிரமுகர் மகனை கடத்த முயற்சி
திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் மகனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் கடத்த முயன்றதாகவும் அவர் தப்பித்து வந்ததாகவும் ராயபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📺நடிகையின் வருமான வரி கணக்கை முடக்க முயற்சி; ஒருவர் கைது
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூரின் வருமான வரி கணக்கை முடக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார்.கரீனா கபூரின் ஆடிட்டர் அளித்த புகாரின் படி, மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய துணை ராணுவப்படையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
📡ஜெயலலிதா மரணத்தில் ஆதாரமற்ற சந்தேகம் வேண்டாம்:வெங்கையா நாயுடு
சென்னை : ஜெயலலிதா மரணத்தில் ஆதாரமற்ற சந்தேகம் எழுப்ப ஆதாரமற்ற சந்தேகம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
📺ஜன. 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார் சசிகலா !
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📡பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வெளியில் இருந்த எல்லா கறுப்புப் பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்றும் எவ்வளவு வந்து சேர்ந்தது என்பதை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் என்றும் சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
📺தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
📡ஒவ்வொரு பணிக்கும் மேலிடத்தின் ஒப்புதலை வாங்க வேண்டியிருப்பதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர் என்பதால், உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
📺தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணம் - 3 நாட்களில் 29 விவசாயிகள் பலி
தஞ்சாவூர்: பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 29 விவசாயிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📡சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி :உயர் நீதிமன்றம்
சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா எம்பி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
📡களத்தில் குதித்துவிட்டார் சசிகலா ...5 நாட்கள் நிர்வாகிகளுடன் சந்திப்பு
அதிமுக பொதுசெயலாளர் பதவி ஏற்ற இரண்டு நாட்களிளில் கட்சி பணிகளை முழு வீச்சில் ஆரம்பித்து விட்டார் சசிகலா
முதலமைச்சர் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும் என்ற கட்சி பிரமுகர்களின் வேண்டுகோள்கள் ஒரு பக்கம் இருப்பினும்.அதிரடி சரவெடியாக தன் கட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்
📺தடையை மீறி மெரினா-காமராஜர் சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது.இதில் ஈடுபட்ட 10 பேரை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
📡போயஸ் கார்டனில் ஜெ.படத்திறப்பு மட்டும் தான்...பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னையன் !
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா படத்தைத் திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
📺கொல்கத்தாவில் பணம் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட தொழிலதிபர் பிரஸ்மால் லோதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சாக்கெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம் பெண்களிடம் அத்துமீறியதாக புகார்
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
📺பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் அவரின் அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியதுஅதன்படி புத்தாண்டின் முதல் வேலை நாளான இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
📡ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 17 பேர் பலி
ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📺ஆரணியில் பூட்டிய வீட்டில் 20 சவரன் கொள்ளை
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் பூட்டிய வீட்டில் 20 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. பாஸ்கர் என்பவர் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
📡தேர்தல் ஆணையத்தில் முலாயம்சிங் முறையீடு
சமாஜ்வாதி கட்சி தேசியத் தலைவர் முலாயம்சிங் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்தார். சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கக்கூடாது என ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமர்சிங், ஷிவ்பால் யாதவ் ஆகியோரும் முலாயம் சிங்குடன் ஆணையத்திற்கு வந்துள்ளனர்.
📺புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தஅகற்றபட்ட தீபாவின் பிளக்ஸ் போர்டு இன்று மதியம் காவல் துறை உதவியோடு நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்
📡தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க முடிவு எனத் தகவல்
சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. கொழும்பு நகரில் இரு நாட்டு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு என தகவல் தெரிவிக்கப்பட்டது.
📡வாகன விபத்து 2 கல்லூரி மாணவர்கள் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியில் தனியார் பள்ளி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரையைச் சேர்ந்த விக்கி,விக்னேஷ் என்ற 2 மாணவர்கள் பலி.
📺சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே எட்டிக்குட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயனம் செய்த காவலர் வெங்கடேசன் மற்றும் அவரது மனை மற்றும் 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே பலி. எடப்பாடி போலீசார் விசாரணை. உயிரிழந்த வெங்கடேசன் ஈரோட்டில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
📡கிருஷ்ணகிரி மாவட்டம் திருச்சியிருந்து ஒசூருக்கு மணல் கடத்த முயன்ற இருவர் கைது
சூளகிரியில் திருட்டு மணல் ஏற்றி சென்ற லாரி மற்றும் ஒரு கார் பறிமுதல தொரப்பள்ளி் கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கோபி - 28 மற்றும் லாரி ஒட்டுனர் சுண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் - 23 இருவர் கைது சூளகிரி போலீஸ் நடவடிக்கை .
📺திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று 7.00 மணிக்கு மதுரை விமானநிலையம் வருகிறார் இரவு ஒய்வு பாப்பீஸ் ஒட்டலில் தங்குகிறார் இதற்கு இடையில் நிகழ்ச்சிகள் இருந்தால் தெரிவிக்கபடும்
📡கொழும்புவில் மீனவர் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை நிறைவு--தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படுமென இலங்கை மீன்வளத்துறை இயக்குநர் தெரிவித்தார்.தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
📺உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் தரம், சுவை குறைவாக இருந்தால் அதற்கான சேவை வரி ரத்து
விரைவு உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் தரம், சுவை குறைவாக இருந்தால் அதற்கான சேவை வரி செலுத்த தேவையில்லை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
📡நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிவகிரி தாலூகாவில் வாசுதேவ நல்லூரில் அரசு பஸ் பைக் மீது மோதியதில் பைக்கில் சென்ற புளியங்குடியை சார்ந்த திருமலைக்குமார் (28), ரமேஷ் (28) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலி. வாசுதேவ நல்லூர் போலீஸார் விசாரணை ..
📺சீனாவிலிருந்து பிரிட்டன் தலைநகர் இலண்டனுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில் போக்குவரத்து நேற்று சீனாவிலிருந்து தொடங்கப்பட்டது. இந்த சரக்கு ரயில் 8 நாடுகளைக்கடந்து 12000 கி.மீ துாரம் பயணம் செய்து 18 நாட்களில் பிரிட்டன் தலைநகர் லண்டன் மேற்குப் பகுதியை சென்றடைகிறது. உலகின் இரண்டாவது நீண்ட பெரிய வழித்தடமாக இது அமைந்துள்ளது.
📺தொகுதி வாரியாக பொதுக்குழு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா
அதிமுகவின் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா
📡கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறு கிராமத்தில் 100 நாள் திட்ட பணியாளர்கள் தொட்டியில் பாம்பு இறந்து இருப்பது தெரியாமல் தண்ணீர் குடித்த 20 பேர் மயக்கம் பண்ருட்டி மருத்துவ மனையில் அனுமதி.
📡தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்--
22 கேரட் தங்கம்
ஒரு கிராம் - ₹2,704
22 கேரட் தங்கம்
ஒரு சவரன் - ₹21,632
24 கேரட் தங்கம்
10 கிராம் - ₹22,624
வெள்ளி: ஒரு கிராம் - ₹41.80
வெள்ளி கட்டி:
ஒரு கிலோ - ₹39,110
📡📺📡📺📡📺📡📺📡📺📡

Comments
Post a Comment