TNPTF இரங்கல் செய்தி
*மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அஞ்சலி*
இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பேரன்பையும், ஆதரவையும் பெற்றவரும்,
தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சி - முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியவரும்,
தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவருமான மரியாதைக்குரிய *தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா* அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக மக்களால் ' *அம்மா* என்று அன்புடன் அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய *முதல்வர் செல்வி. ஜெயலலிதா* அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் வலிமைமிக்க - துணிவுமிக்க தலைவராகவும் விளங்கிய சாதனைப் பெண்மணி ஆவார்.
அவர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய மதிப்புமிக்க தலைவர். அவரது நினைவு தமிழ்மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்* சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
ச.மோசஸ்,
மாநிலத் தலைவர்,
செ. பாலச்சந்தர்,
பொதுச்செயலாளர்,
ச.ஜீவானந்தம்,
மாநிலப் பொருளாளர்,
TNPTF.

Comments
Post a Comment