ஜெ அம்மாவின் வாழ்க்கை குறிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி
ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
பிறந்த தேதி : 24.2.1948
இடம் : மைசூர்
கல்வி நிலை : மெட்ரிகுலேஷன்
குடும்பம் : திருமணமாகாதவர்
தொழில் : விவசாயம்
விருதுகளும் சிறப்புப் பட்டங்களும்:
1972 ஆம் ஆண்டு தமிழக அரசினால் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” (டி.லிட்.) பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு ஆசிய சபை விருதான “பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி” என்ற பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் House of Lords அழைப்பு விடுத்தது.
2004 ஆம் ஆண்டு, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, “தங்கத் தாரகை”விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு, இவருடைய மிகச் சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையை பாராட்டியதோடு, தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியு ஜெர்ஸி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
அரசியல் ஈடுபாடு :
இவரது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, 1982 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர் ஆனார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து முதன் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டார். தான் முன்னின்று வழிநடத்திய முதல் தேர்தல் பிரச்சாரத்திலேயே அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து கழக வேட்பாளருக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தார்.1984 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1989 ஆம் ஆண்டில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வகித்தார். 1984 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த போது, 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் களத்தில் இல்லாதபோது, அவருடைய இடத்தில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்தினை முன்னின்று வழிநடத்தி, கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.1987-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் “இரட்டை இலை” தேர்தல் சின்னம் முடக்கப்பட்டது. 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் “சேவல்” சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. இதனையடுத்து, இவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையில் இணைந்த பின், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments
Post a Comment