வர்தா புயல் கரையை கடக்கிறது எச்சரிக்கை
*சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது : 140 கி.மீ. வேகத்தில் காற்று*
சென்னை: சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. மேலும் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வட கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு - கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை காற்று வீசுக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்த பின்னரே மின்சாரம் வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து
புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 52 இடங்களில் மரங்கள் விழுந்ததால் பல்வேறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னை சாந்தோம் முதல் தலைமைச்செயலகம் வரை 25 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மரங்கள் சாய்ந்தன
சென்னை எண்ணூர் சாலையில் மரம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வர்தா புயல் காரணமாக எண்ணூரில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பல இடங்களில் மரம் விழுந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment