வீர வணக்கம் பிடல் காஸ்ட்ரோ
உலக அளவில் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசக் கொள்கை என்னும் பொதுவுடமை கொள்கை கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்தான் இன்றைய தினத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.
யார் இந்த பிடல் காஸ்ட்ரோ?
ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்:
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் அதனுடைய கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரி படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார் காஸ்ட்ரோ அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.
கியூபாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது ரஷ்யா தான். கியூபாவின் பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. மேலும் கியூபா மக்களும் தங்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.
இதனால் அமெரிக்க நிறுவனக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.
பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது. அதில் முக்கியமானவை, பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த திட்டங்கள் குறித்த செய்திகள் எல்லாம் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பிடல் காஸ்ட்ரோவை கொல்ல மேற்கொண்ட சூழ்ச்சிகள்:
இந்த ஆவணங்களின்படி, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக முதலில் இருக்கவில்லை. மக்களிடம் அவருக்குள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உதாரணமாக தாடிக்காரர், விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர் என்பது மாதிரியான கேலி வார்த்தைகளை அதிகமாகக் கசிய விட்டிருக்கிறார்கள். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது.
தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது ரேடியோவில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரைத் தெளிக்கலாமா என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது.
அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் சூவுக்குள் நச்சு ரசாயனத்தைத் தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் யோசித்திருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு காஸ்ட்ரோ சுற்றுப்பயணம் செய்யும்போது, ஹோட்டல் சிப்பந்தி மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுவும் நிறைவேறவில்லை.
இதன் தொடர்ச்சியாக விபத்து மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை அழிக்க முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது. முன்னோட்டமாக காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒரு கியூப குடிமகனை இந்தத் திட்டத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள். பல கட்ட மூளைச்சலவைக்குப் பின் குடும்பச் சூழ்நிலைக்காக கார் மூலம் விபத்து ஏற்படுத்த அந்த கியூபன் ஒப்புக் கொண்டான். ஆனால், இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.
இதே காலகட்டத்தில் சி.ஐ.ஏ.வின் மருத்துவ பிரிவு 1960 ஆம் வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, விஷ சுருட்டுகள் அடங்கிய பெட்டியை சி.ஐ.ஏ. ஏஜென்டிடம் கொடுத்துள்ளது. அதில் உள்ள எந்தச் சுருட்டை எடுத்து காஸ்ட்ரோ தன் உதடுகளில் வைத்தாலும் உடனே மரணம் நிகழும். அந்தளவு சக்தி வாய்ந்த அந்த ரசாயன சுருட்டுப் பெட்டி, காஸ்ட்ரோவிடம் போய்ச் சேர்ந்ததா என்பதற்கான குறிப்பு இந்தத் தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களில் இல்லை.
இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாஸ்க் போர்ஸ் மூலமாக காஸ்ட்ரோவை அழிக்க முடியுமா என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது.
இதற்கெல்லாம் முடி சூட்டுவது போல ஒரு முயற்சியை சிஐஏ தீட்டியது, அதுதான் பிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்தே பிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. அதற்கு பிடல் காஸ்ட்ரோவின் காதலியும் சம்மதம் தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் இருக்கும்போது அவரது காதலி பிடல் காஸ்ட்ரோ பயன்படுத்து நறுமணப் பொருளில் பயங்கர நச்சு கலந்த விஷத்தை கலந்து வைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது காதலியின் சூழ்ச்சியை அறிந்த பிடல் காஸ்ட்ரோ அவரை அழைத்து தனது துப்பாக்கியை அவரிடம் கொடுத்து அவரை சுட சொன்னார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் காதலியோ மனம் உருகி அழுது தன்னால் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாது என கூறினார்.
*அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ*

Comments
Post a Comment