சிறப்பு பார்வை - கணிணி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறி
ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்? இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தே கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா, டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட். படிச்ச நாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொள்ளும் டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட 407 பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏ பெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப் பள்ளிகள் எதிலும் கணிப்பொறி வழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான் பல பள்ளி மாணவர்கள் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள்.
2011 இல் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள் அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம் இருந்தது.ஆனால்,அந்த
புத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல் முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல் வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனு கொடுத்திருக்கிறோம்.
47முறை சென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.
அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.
எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்ற பதில்தான் வருகின்றது.
தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும் மேம்படுத்த அரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்கு மட்டுமே அதுவும் பாதி பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன்.
****
படித்தது கணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!
"2010இல் பி.எட் முடிச்சேன். அப்ப் கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில் வேலை பாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு.இப்ப வரைக்கும் எவ்வளவோ போராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும் ஒண்ணும் நட்க்கல.நாங்க நாற்தாயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் .அங்கு பள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒரு டீச்சருக்கு வேலை கிடைச்சிருந்தாலும் படிச்சவங்க பாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.
*ரங்கநாயகி, அந்தியூர்*
பி.எட் முடிச்சிட்டு ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன் சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்ச படிப்புக்கேத்த வேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்த வேலையைச் செஞ்சிட்டிருக்கேன். பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர் சயின்ஸ்னா வேலை கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டு போய்டுறாங்க.
*ஆரிஃபா, ஈரோடு*
எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டு ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்க வேலை செஞ்சுதான் குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம் தள்ளிப்போய்ட்டு இருக்கு.
*லலிதா, கொள்ளிமலை*
அம்மாவோட கூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடு மாடு அப்பா பாத்துக்கிறாங்க.இவ்ளோ தூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறது ரொம்ப கஷ்டம இருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலை வாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்க வந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க....
*கிருத்திகா, கோவை*
எனக்கு குடும்பத்தில பல சிக்கல்.அரசு வேலைதான் என்னை மீட்டெடுக்காணும் என்னுடைய ரெண்டு பெண் குழந்தைகளோட எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையா இருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...
****
*சாய் ஜானு , கரூர்*
நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன்.
என்க்கு சில கேள்விகள் இருக்கு.
--->
வேலைகேட்டு போராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுன்னு சொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலை தரக்கூடாது என்பதா?
--->
அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில் ஏன் இந்தப் படிப்ப நீக்காம வைச்சிருக்கங்கா?
--->
சபீதா மேடம் மத்திய அரசு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்த பணத்தை ஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?
இதுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு ?
என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.
சுமார் 40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள் .இவர்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின் மீது கருணை கண் காட்டுமா??
திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014

Comments
Post a Comment