தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரச்சி அடைந்துள்ளனர்.
கடந்த செப் 25ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தராமன் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தார். அடுத்த நாள் முதலே வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்று (3 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் கடைசி நாளானது. வரும் 6ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம், அக்.6 வாபஸ் பெற கடைசி நாள், வரும் 17 , 19 தேதிகளில் ஓட்டுப்பதிவும், வரும் 21 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது.அவ்வளவு அவசர, அவசரமாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
4 லட்சத்திற்கும் மேல் வேட்பு மனு:
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அவசர, அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து , 840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் இன்று தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
நீதிபதி உத்தரவு முழு விவரம்:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் தொடர்பான 3 ஆணைகளை ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பாக மறு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் உத்ததரவில் கூறப்பட்டுள்ளதாவது:
* தேர்தல் அறிவிப்பாணை பிரிவு 103, 105, 106 ஆகியன ரத்து செய்யப்படுகிறது.
* பெண்கள், பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சுழற்சி முறையில் ஒதுக்கீடு குறித்து வெளியிட வேண்டும்.
* தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவசர கதியில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
* அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
* மறு தேதி அறிவித்து வரும் டிசம்பர் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
* குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ''2011 செப்., 21ல், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது; அதேபோல், 2006 செப்., 19ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுநாள் வேட்புமனு பெறப்பட்டது. ஏற்கனவே பின்பற்றிய நடைமுறை தான், இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது,'' என்றார்.
விதி மீறப்பட்டுள்ளதா?: தி.மு.க., தரப்பு மூத்த வழக்கறிஞர், ''இட ஒதுக்கீடு தொடர்பான அரசு உத்தரவை, செப்., 16ல் வெளியிட்டாலும், 23ல் தான் நகல்கள் கிடைத்தன; இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, ஆறு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும்; அந்த விதி மீறப்பட்டுள்ளது,''என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ''இதுபோன்ற குற்றச்சாட்டை, மற்ற கட்சிகள் கூறவில்லை; இதுவரை, 42 ஆயிரம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
source: dinamalar
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment