ஆசிரியர் கலந்தாய்வு* *முக்கிய அம்சங்கள்* 2016
*ஆசிரியர் கலந்தாய்வு*
*முக்கிய அம்சங்கள்*
1. முதலில்அரசு பள்ளிகளில் 01.06.2016 ன்படி காலிப்பணியிடங்கள் கண்டறியப்படும்.
2. உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு தேவைப்படும் இடங்களில் பணிநிரவல் செய்யப்படும்.
3.அதன் பிறகு பள்ளி நலன்,மாணவர் நலன் கருதி நிர்வாக மாறுதல் செய்யப்படும்.
4. பின்பு மனமொத்த மாறுதல் முடிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது..
5.மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் அப்பள்ளியில் பணியில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மனமொத்த மாறுதல் விண்ணப்பிப்பவர்களுக்கும் இதே முறை கடைபிடிக்கப்படும்.
6.அனைத்துப்பிரிவுகளிலும் வழக்கம் போலவே முன்னுரிமைகள் வழங்கப்படும்.
7.தொடக்க/நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த மட்டில்,மாவட்ட மாறுதல் வழங்கப்படும் பொழுது ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மற்ற அலகுகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.
8. 01.06.2015 க்குப் பின்னர் spouse இறந்திருந்தால் சிறப்பு நிகழ்வாக்க் கருதி,விதிமுறைகளில் தளர்வு செய்து சிறப்பு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும்.
9.நிர்வாக காரணத்தினால் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றவர்கள் அப்பள்ளியில் 3 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
10.மாவட்ட மாறுதல் வேண்டுவோர் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டியதில்லை.
மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்.
11.மலைச் சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும்.
12.தொடக்க கல்வித்துறையில் ஈராசிரியர் பணியிடங்களில் பதிலி ஆசிரியர் பணியேற்ற பிறகே பணிமாறுதல் ஆணை பெற்றவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்.
13.Unit transfer,ADW,
Welfare schools,Kallar schools,Municipal schools போன்றவற்றிலிலுந்து பள்ளிக் கல்வித்துறைக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் நகராட்சிப் பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெறலாம்.
14.ஆண்கள் பள்ளிகளுக்கு ஆண்களும் பெண்கள் பள்ளிகளுக்கு பெண்களும் (ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட)மாறுதல் பெற முன்னுரிமை வழங்கப் படும்.ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையெனில் இதில் தளர்வு உண்டு.
15.பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த, திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளவர்கள் போன்றோருக்கு வழக்கம் போல சலுகைகள் வழங்கப்படும். ஆனால் இவர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment