வெள்ளி திரை விமர்சனம் - தெறி
வெள்ளி திரை விமர்சனம் - தெறி
தினத்தந்தியில் வெளியாகியுள்ள சினிமா விமர்சனம்
கதாநாயகன்–கதாநாயகி: விஜய்–சமந்தா
டைரக்ஷன்: அட்லி
கதையின் கரு: நல்ல போலீஸ் அதிகாரிக்கும் வில்ல அரசியல்வாதிக்கும் நடக்கும் மோதல்.
கேரளாவில் பேக்கரி கடை வைத்து பள்ளியில் படிக்கும் ஒரே மகள் நைனிகாவுடன் ஜாலி, அரட்டை என சந்தோஷமாக இருக்கிறார் விஜய். சண்டை, சச்சரவுகளை பார்த்து ஒதுங்கிப்போகும் அப்பாவி. அவர் மீது ஆசிரியை வேலை பார்க்கும் எமிஜாக்சனுக்கு ஒருதலை காதல். எமிக்கும், வில்லன்களுக்கும் ஏற்படும் மோதலில் விஜய் தலையிட நேர்கிறது. அப்போது அவர் ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி என்பதும் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்கிறார் என்பதும் தெரிய வர, பிளாஷ்பேக்...
நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்க்கும், டாக்டர் சமந்தாவுக்கும் ஒரு மோதலில் காதல் பிறக்கிறது. திருமணம் செய்துகொள்கின்றனர். ஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் இளம்பெண்ணை அரசியல்வாதி மகேந்திரன் மகன் கடத்தி கற்பழித்து குற்றுயிராய் தூக்கி வீசுகிறான். அவள் இறந்து போகிறாள். அவனை விஜய், பிணமாக்கி பாலத்தின் கீழ் தொங்க விடுகிறார். இதனால் விஜய் குடும்பத்தில் மகேந்திரனால் பேரிழப்பு நடக்கிறது. மகேந்திரனையும் அவர் கூட்டாளிகளையும் விஜய் பழிதீர்த்தாரா? என்பது மீதி கதை...
விஜய்க்கு அதிரடியான இன்னொரு போலீஸ் படம். தனது பாணி கேலி, கிண்டல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ரோஷம் என பல உணர்வுகளின் கலவையாக சுவாரஸ்யம் காட்டுகிறார். மகளுடனான சிறுசிறு விளையாட்டுகள், குறும்புதனங்களில் ஈர்க்கிறார். ரவுடிகளிடம் அடிவாங்கி ரத்தக்களறியாக கிடந்து மகளுக்கு ஆபத்து என்றதும் சீறித்தாக்கும் ஒவ்வொரு அடியிலும், இடி.
போலீஸ் உடையில் கெத்து. சுவிங்கமை கையில் தட்டி வாய்க்குள் எறியும் ஸ்டைலில் ஆரவாரப்படுத்துகிறார். சிறுவர்கள் கை கால்களை உடைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பலை ரோட்டில் ஓட ஓட விரட்டி துவம்சம் செய்வது பரபர. காப்பாற்றப்பட்ட சிறுவர்–சிறுமிகள் விஜய்க்கு நன்றி சொல்வது விழிகளை நனைக்கிறது. சமந்தாவுடன் காதல் வயப்படுவது, போலீஸ் வேலையை வெறுக்கும் அவரது தந்தையை பேச்சால் வசியப்படுத்தி சம்மதிக்க வைப்பது அழுத்தமான சீன்கள்.
பள்ளிக்குள் குடித்து மட்டையாக கிடக்கும் ரவுடிகளை வகுப்பறைக்குள் அடைத்து பாட புத்தகத்தில் இருந்து கேள்வி கேட்டு நொறுக்குவது, ரகளை. பெண் கடத்தல் பற்றிய துப்பறியும் சீன்கள் பரபரக்க வைக்கின்றன. சமந்தா அழகான காதலியாக வருகிறார். முடிவு பரிதாபம். எமிஜாக்சன் வழக்கமான கவர்ச்சியை மறைத்து போர்த்திக்கொண்டு வந்து போகிறார். நடிப்புக்கு வேலை இல்லை.
சாவு தனக்கு நடக்கும் போது அந்த வலி தெரியாது. நெருக்கமான உறவினர்களுக்கு நடக்கும் போதுதான் வலி தெரியும் என்று பஞ்ச் பேசி யதார்த்தமான வில்லனாக வந்து மிரட்டுகிறார் இயக்குனர் மகேந்திரன். சிறுமி நைனிகா சுட்டித்தனங்களால் கவர்கிறார். மொட்டை ராஜேந்திரன் சிரிக்க வைக்கிறார். பிரபு, ராதிகா, காளிவெங்கட், அழகம்பெருமாள் ஆகியோர் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
போலீஸ் கதைக்குள் காதல், அதிரடி, சென்டிமென்ட், சமூக அவலங்களை வைத்து விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் அட்லி. வசனங்கள் பெரிய பலம். எரியும் வீட்டுக்குள் குற்றுயிராய் கிடக்கும் விஜய் எப்படி தப்பினார்? என்பதற்கு விளக்கம் இல்லை. ஜி.வி.பிரகாஷ் இசையில் ஜித்து ஜில்லாடி பாடல் ஆட்டம்போட வைக்கும் ரகம். ஜார்ஜ் சி, வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் நிறைய உழைப்பு தெரிகிறது.

Comments
Post a Comment