சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்கள் பயணம்
பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ லட்சம் கோடி) செலவில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி (வயது 52), ரஷிய விண்வெளி வீரர் மிக்கேல் கொர்னியங்கோ (55) ஆகிய இருவரும் சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.
இப்போது அவர்களுக்கு பதிலாக அமெரிக்க விண்வெளி வீரர் ஜெப் வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரர்கள் ஓலக் ஸ்க்ரைபோச்கா, அலெக்சி ஓவ்சினின் ஆகிய 3 பேரும் ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலம் நேற்று (மார்ச் 19)
இந்திய நேரப்படி அதிகாலை 2.56 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் அங்கு சில காலம் தங்கி இருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவார்கள்.
அவர்களில் ஜெப் வில்லியம்ஸ் ஏற்கனவே 3 முறை விண்வெளிப்பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment