நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
10ம் வகுப்பு பொது தேர்வு; தேர்வுத்துறை நடவடிக்கை
- இத்தேர்வுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் அரசுத் தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றின செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்
புள்ளி விவரங்கள்:
இடைநிலைப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,054பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,72,223மாணவ/மாணவியர்கள் (தனித் தேர்வர்கள் உட்பட) தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவ/மாணவியர்களில் மாணவர்கள் 5,14,798பேர், மாணவியர் 5,08,852 பேர் ஆவர். மாணவிகளை விட 5,946 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். பள்ளி மாணவர்களை தவிர 48,573தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் 574பள்ளிகளிலிருந்து மொத்தம் 53,168மாணவ/மாணவியர்கள் 209 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 25,795 மாணவர்கள் மற்றும் 27,373 மாணவிகள் உள்ளடங்குவர்.
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 48தேர்வு மையங்களில், 298 பள்ளிகளைச் சார்ந்த 17,041 மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 8346 பேர் மற்றும் மாணவியர் 8695 பேரும் ஆவர். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக இடைநிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 3369 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டிற்கான இடைநிலைப் பொதுத் தேர்வினை 250 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி,கோயமுத்தூர் மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.
இடைநிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று இடைநிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 6,70,814 ஆகும்.
Comments
Post a Comment