மே16 தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் மே 16ம் தேதி ஓட்டுப்பதிவு; 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று (4 ம் தேதி ) அறிவிக்கப்பட்டது. இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் மே 16ம் தேதியும், அசாமில் ஏப்ரல் 4 ம் தேதியும் , மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி டில்லியில் நிருபர்களிடம் கூறினார்.தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் . இதற்கென பிரசார யுக்தி மற்றும் கூட்டணியில் பிற கட்சிகளுடன் பேச்சு என மும்முரமாக இறங்கியுள்ளன.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்படைந்துள்ளனர் .
டில்லியில் தேர்தல் தலைமை கமிஷனர் நஜீம் ஜைதி நிருபர்களை சந்தித்தார்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது :தமிழகம் , புதுச்சேரி, கேரளா, அசாம் , மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் முடிவதால் தேர்தல் நடத்தப்படவுள்ளது. திருவிழா, பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதன்படி தமிழகம் , புதுச்சேரி கேரளாவில், ஒரே கட்டமாகவும் அசாமில் 2 கட்டமாகவும் , மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும். இன்று முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தன.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் எப்போது ?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 22 ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 29 ம்தேதி மனு தாக்கலுக்கு இறுதி நாள் , ஏப்ரல் 30 ல் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் மே 2 மனு திரும்ப பெறும் நாள். ஓட்டுப் பதிவு மே 16 ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19 ம் தேதி இவ்வாறு தேர்தல் கமிஷனர் ஜைதி கூறினார்.கேரளாவில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21 , 25, 30, மே 5 தேதிகளில் வரிசைக் கிரமமாக 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4 ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 11 ம் தேதி 2 ம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. 5 மாநில ஓட்டு எண்ணிக்கை ஒரே நாளில் மே 19 ம் தேதி நடக்கும்.

Comments
Post a Comment