ஊழலை ஒடுக்காத அரசுக்கு வரி கட்டாதீர்கள்: ஐகோர்ட் அதிரடி
💥💥🔨🔨ஊழலை ஒடுக்காத அரசுக்கு வரி கட்டாதீர்கள்: ஐகோர்ட் அதிரடி
மும்பை : ஊழலை ஒடுக்க தவறிய மாநில அரசுக்கு மக்கள் வரி கட்ட கூடாது என மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அரசு நிதி கையாடல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நாக்பூர் பெஞ்ச், இதனை தெரிவித்துள்ளது.
அரசு நிதி கையாடல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசும், அதிகாரத்தில் இருப்பவர்களும் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். வரி செலுத்துபவர்களை வதைப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் ஒரு பன்முகம் கொண்ட அரக்கன். அந்த அரக்கனை ஒடுக்கவும், ஒழிக்கவும் தவறும் மாநில அரசுக்கு மக்கள் வரி செலுத்தக் கூடாது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கி, ஒன்றுபட்டு போராட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் ஊழலை ஒழிக்க முடியும் என்றனர்.
சமீபத்தில், சர்வதேச ஊழல் வரையறை குறியீட்டு கழகம் நடத்திய ஆய்வில் 2015ம் ஆண்டில் இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 76வது இடத்தில் இருப்பதாகவும், அதேசமயம் 2014ம் ஆண்டு இருந்த அதே இடத்திலேயே இந்தியா தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறி இருந்தது. இந்நிலையில் ஊழலை குறிக்க அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் அரசுக்கும் எதிராக ஒன்றுபட்டு, ஊழலை ஒழிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Comments
Post a Comment