ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
ரயில்வே பட்ஜெட்
முக்கிய அம்சங்கள்
சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை
* ரயில்வேயின் தொலைநோக்கை கனவாக்க முக்கியத்துவம்
* ரயில்வேயின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது
* சவாலான சூழ்நிலையில் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறோம்.
* 2016 - 17-ம் நிதியாண்டில் ரூ. 1.8 லட்சம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.
* சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை
* ரயில்வே கட்டணத்தை உயர்த்தாமல் மற்ற வழிகளில் நிதி வருவாயை உயர்த்த முயற்சி
* இயக்க விகிதம் 92 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்ப்பு
* பட்ஜெட்டின் முதல் இலக்கு பயணிகளின் சேவையை உயர்த்துவது
* ரயில்வேயின் பணிச்சூழலை புணரமைக்கும் திட்டம்
2500 கீ.மீ நீளம் அகல ரயில்பாதை
* கடந்த ஆண்டை விட ரயில்வேயில் முதலீட்டை இருமடங்காக்க திட்டம்
* கடந்த பட்ஜெட்டிலெ் அறிவிக்கப்பட்டவைகளில் பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
* 139 திட்டங்கள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன.
* 2500 கீ.மீ நீளமுள்ள ரயில்பாதைகள் அகல ரயில்பாதைகளாக்கப்படும்.
* நாளொன்றுக்கு 7 கி.மீ ரயில்பாதை உருவாக்க இலக்கு நிர்ணயம்
குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்க தீவிர நடவடிக்கை
* ரயில்பாதை பணிகள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்
* டெல்லி - சென்னை உள்ளிட்ட முக்கிய சரக்கு ரயில்பாதை திட்டங்களின் செயலாக்கத்திற்கு முன்னுரிமை
* 2020 க்குள் அனைத்து ரயில் கிராசிங்குகளிலும் பணியாட்கள் நியமனம்
* 2016-17 ல் 1.21 லட்சம் கோடி முதலீடு
* 2020க்குள் ரயில்வே கால அட்டவணைப்படி குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்க தீவிர நடவடிக்கை
* 2 ஆயிரம் கிலோ மீட்டர் பாதை மின்மயமாக மாற்ற நடவடிக்கை
* பொருளாதார வளர்ச்சிக்கு ஊதிய உயர்வுக்குழு போன்றைவை ரயில்வே முன் உள்ள சவால்கள்
* 100 சதவீத வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும்
* மொத்த வருவாயில் சரக்கு கட்டணத்தின் பங்களிப்பு 6சதவீதம்
மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை வசதி அதிகரிப்பு
* விஷன் 2020 கீழ் பல திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ரயில்வே மேம்பாட்டுக்கு 124 எம்.பிக்கள் நிதியளிக்க உறுதி.
* 40 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்
* 2020 க்குப்பிறகு ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இந்தியாவில் இருக்காது.
* திட்டங்கள் செயலாக்கத்திற்கு மாநில அரசுகளுடன் இணைந்த செயல்பாடு பெரும் மாற்றங்களை நிகழ்த்தும்
* 1780 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு
* மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை வசதி 50 சதவீதமாக அதிகரிப்பு
முழு அளவில் முன்பதிவு செய்யாத ரயில்கள் அறிமுகம்
* கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்படாத அந்த்யோதயா ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்
* நடப்பு நிதியாண்டுக்குள் 17,000 பயோ - டாய்லெட் ரயில்களில் ஏற்படுத்தப்படும்..
* எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்
* நெரிசல் மிகுந்த பாதைகளில் இரட்டை அடுக்கு ரயில் விடப்படும்
* பார் கோடு தொழில்நுட்பத்துடன் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்
* சில நீண்ட தூர ரயில்களில் கூடுதலாக 2 முதல் 4 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.
100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி
* நடப்பு ஆண்டில் மேலும் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும்
* குழந்தைகள் உணவுகள் ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்
* வரும் நிதியாண்டில் மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை ஒதுக்கீடு உயர்த்தப்படும்
* முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்
* வெளிநாட்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு இ - டிக்கெட் வசதி ஏற்படுத்தப்படும்
ரயில் பெட்டிகளில் எப். எம் வானொலி வசதி அறிமுகம்
* இ - கேட்டரிங் சேவை 45ல் இருந்து 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்
* பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்
* ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை ( எப். எம் ) வானொலி வசதி ஏற்படுத்தப்படும்
* ரயில்வே போர்ட்டர்கள் கூலிக்கு பதிலாக இனி 'சகாயக்' என்ற பெயரில் அழைக்கப்படுவர்
* பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகம்!
ரயில் பெட்டி தூய்மைக்கு எஸ்.எம்.எஸ். சேவை
* தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் கையடக்க கருவிகள் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு!
* ரயில் பெட்டி தூய்மைக்கு எஸ்.எம்.எஸ். சேவை
* * ரயில் முன்பதிவு பெட்டிகளில் பெண்களுக்கு 33% சீட் ஒதுக்கீடு
* பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை வசதியில் இணையதள டிக்கெட் புக்கிங் வசதி
* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு ரயில்பெட்டித் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
ரயில் நிலைய மேம்பாட்டில் நாகை, வேளாங்கண்ணி சேர்ப்பு
* அடுத்த நிதியாண்டில் சரக்கு ரயில்களுக்காக பணிமனைகள் அமைக்கப்படும்
* சிறுவர்களுக்கான சிறப்பு உணவு பட்டியல் அறிமுகப்படுத்தப்படும்
* சில நீண்ட தூர ரயில்களில் கூடுதலாக 2 முதல் 4 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். அதில் குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உடன் அந்த பெட்டிகள் இருக்கும்
* ரயில்வே துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ 50 கோடி ஒதுக்கீடு
* ரயில் நிலையம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகை, வேளாங்கண்ணி, திருப்பதி ரயில் நிலையம் சேர்ப்பு
* பயணச் சீட்டு முன்பதிவின் போது பயணக்காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்
கட்டண உயர்வு இல்லை
* குறிப்பிட்ட சில ரயில்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்
* ரயில் நிலையங்களில் பேட்டரி கார் அறிமுகம்!
* 139 மூலம் டிக்கெட் ரத்துச் செய்யலாம்!
* சிறுவர்களுக்கான சிறப்பு உணவுப் பட்டியல் அறிமுகம்!
* சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்!
* பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வு இல்லை!
Comments
Post a Comment