அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு
💥💥அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு
சென்னை, பிப். 17–
அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்தது.
வெள்ளிக்கிழமை முதல் அரசு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு துறையின் முக்கிய அலுவலகங்கள் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் எழிலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எவ்வித அறிவிப்பும் இடம் பெறாததால் ஏமாற்றம் அடைந்த அரசு ஊழியர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளதால் இன்று முதல் மறியல் போராட்டம் தீவிரம் அடைகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் போராட்டக்குழு என்ற புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டத்தில் இறங்குகின்றனர். இதனால் இதுவரை மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த மறியல் போராட்டம் இன்று முதல் தாலுகா அளவில் நடைபெறுகிறது.
2 லட்சம் அரசு ஊழியர்களுடன் 2 லட்சம் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அரசு துறை பணிகள் கடுமையாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த் துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை போன்ற துறைகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகிறார்கள்.
காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:–
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதித்துறை, செவிலியர், டாக்டர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்துகிறோம். இதற்காக புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம்.
இன்று முதல் தாலுகா வாரியாக 500–க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதுவரையில் நடந்த போராட்டத்தை விட இன்று முதல் நடக்கும் போராட்டம் தீவிரமாக இருக்கும்.
1½ லட்சம் அரசு ஊழியர்களுடன் தினமும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் வீதம் மறியலில் பங்கேற்று கைதாகிறார்கள். வெள்ளிக்கிழமை வரை எங்களது போராட்டம் இதே அளவில் நீடிக்கும்.
அதற்குள் எங்களை அழைத்து பேசவோ, கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளிவந்தாலோ முடிவு பரிசீலிக்கப்படும். இல்லையென்றால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள்– ஆசிரியர் கூட்டமைப்பினர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில நிர்வாகிகள் அன்பரசு, தியாகராஜன், பட்டாபிராமன் தலைமையில் ஊழியர்கள் கைதானார்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments
Post a Comment