பாகுபலி 2 சினி சிப்ஸ்
பாகுபலி 2'-க்காக உடல் எடையை 150 கிலோவுக்கு கூட்டும் பிரபாஸ்
'
நடிகர் பிரபாஸ் 'பாகுபலி 2'-ம் பாகத்தில் 150 கிலோ எடையில் நடிக்கவுள்ளார். தற்போது 120 கிலோ எடையிருக்கும் பிரபாஸ் இன்னும் 30 கிலோ எடை கூட இருக்கிறார்.
'பாகுபலி' படத்தின் 2-ம் பாக படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் 'பாகுபலி' பாத்திரத்திலும், அவரது மகனான ஷிவுடு பாத்திரத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். கம்பீரமான ராஜ பரம்பரையைச் சேர்ந்த கதாபாத்திரம் என்பதால் முதல் பாகத்திலேயே அதற்கேற்றவாறு எடை கூடி நடித்திருந்தார்.
தற்போது இரண்டாம் பாகத்தில் 150 கிலோ எடையில் இன்னும் மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதால், 2 பயிற்சியாளர்களையும், ஒரு டயடீஷியனையும் உடன் வைத்துக் கொண்டு, எடை கூடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்காக தினமும் 5 மணி நேரத்தை ஜிம்மில் செலவிடும் பிரபாஸ், தினமும் 50 முட்டைகள், அரை கிலோ சிக்கன், பழங்கள், காய்கறிகள் என சாப்பிட்டு வருகிறார்.
பிரபாஸின் பயிற்சியை நேரில் கண்டவர்கள், அவர் ஓர் அசுரனைப் போலத் தயாராகிவருவதாக பிரம்மிப்புடன் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment