வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
🍁💐🍁💐🍁💐🍁
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
🍁💐🍁💐🍁💐🍁
எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க வகை செய்யும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம்தேதி மக்களவையிலும், டிசம்பர் 21-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு டிசம்பர் 31-ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, நாளை முதல் (ஜனவரி 26) இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருகிறது.
எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினரின் தலையை மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற இழிவுபடுத்தும் செயல்கள், மனிதச் சடலங்கள், விலங்குகளின் சடலங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கும், தூக்குவதற்கும் கட்டாயப்படுத்துவதற்கு எதிராக இந்த சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாதி பெயரைச் சொல்லி திட்டுவது, கழிவுகளை அகற்றும் பணியில் கட்டாயமாக ஈடுபடுத்துவது போன்ற குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல்வேறு வன்கொடுமைகளுக்கு எதிராக தண்டனை வழங்கவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

Comments
Post a Comment