தமிழ் விருது
🍁💐🍁💐🍁💐🍁
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
🍁💐🍁💐🍁💐🍁
தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-
1. திருவள்ளுவர் விருது - 2016 : முனைவர் வி.ஜி. சந்தோசம்
2. தந்தை பெரியார் விருது – 2015 : வி.ஆர். வேங்கன், தருமபுரி
3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015 : எ. பொன்னுசாமி
4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 : பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி
5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 : மருத்துவர் இரா. வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே. கல்லுப்பட்டி
6. மகாகவி பாரதியார் விருது – 2015 : கவிஞர் பொன்னடியான்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 : முனைவர் வீ. ரேணுகாதேவி, மதுரை
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2015 : கி. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2015 : இரா.கோ. இராசாராம், மதுரை.
மேற்காணும் விருதுகளை 16.1.2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவி அரசாணைகளும் இவ்விழாவில் வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment