மீண்டும் தடை
ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து ஜனவரி 8ல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியும் இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 11 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துண்புறுத்தப்படுவதாக கூறியுள்ள மனு தாரர்கள் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்களின் பட்டியலில் ஏற்கனவே காளை இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளனர். அதை நீக்கி கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை சட்டத்திற்கு புறம்பானது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது, இதனை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக கூறி, இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 13 வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த வழக்கின் மீதும் தங்களது கருத்தினை அறிந்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழக அரசு சார்பில், ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Comments
Post a Comment