பேய் மழை
☔பேய் மழை☔
www.tnsocialpedia.blogspot.com
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடாக சென்னை : சென்னை நகரில் பெய்து வரும் கனமழையால் நகரமே தண்ணீரில் மிதக்கின்றது. பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொற்றலை, அடையாறு, ஆரணி, பாலாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, திருவள்ளூர் பல்கலை, சென்னை மாநிலக் கல்லுாரியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக்குழுவினருடன் இணைந்து ராணுவத்தினரும், கப்பற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு
மேலும் 4 நாள்களுக்கு மழை : இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை
அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ரயில்கள் ரத்து : சென்னை எழும்பூரிலிருந்து புறப்படவேண்டிய 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-குருவாயூர் ரயில், புவனேஸ்வர்-புதுச்சேரி ரயில் ஆகிய ரயில்கள் இன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. மேலும் பல ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே துறையினர், அவ்வாறு ரத்தாகும் பட்சத்தில் பயணிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
விமானநிலையம் மூடல்
அபாய கட்டத்தில் சென்னை குடிநீர் ஏரிகள்
வெள்ள காடான புதுச்சேரி: மக்கள் தவிப்பு

Comments
Post a Comment