வெள்ளி திரை விமர்சனம்-10 எண்றதுக்குள்ள
வெள்ளி திரை விமர்சனம்-10 எண்றதுக்குள்ள
‘டிரான்ஸ்போர்ட்டர்’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘10 எண்றதுக்குள்ள’ என்று சொல்லும் அளவுக்கு தான் படத்தின் கருவும், திரைக்கதையும் அமைந்துள்ளது. அதற்காக, ”ஹாலிவுட் படம் போல இருக்குமோ”! என்று நினைக்காதிங்க.
டிரைவிங் மாஸ்டராக பணியாற்றி வரும் விக்ரம், அவ்வபோது கடத்தல் தொழிலுக்காகவும் தனது டிரைவிங்கை பயன்படுத்தி வருகிறார். உரிய நேரத்தில் உரியவரிடம் பொருளை டெலிவரி செய்வதில் வல்லவரான விக்ரம், எந்த பொருள், யாருடையது என்று பாராமல், பணம் கொடுத்தால் காரை ஜெட் வேகத்தில் ஓட்டுவதை மட்டுமே தனது கடமையாக கொண்டிருக்கிறார். விக்ரமின் அதிவேக கார் ஓட்டும் திறனைப் பார்த்து, கடத்தல்காரரான பசுபதி, அவ்வபோது விக்ரமை வைத்து பெரிய பெரிய கடத்தல் வேலைகளை கச்சிதமாக முடிக்கிறார்.
இதற்கிடையில், கார் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக நாயகி சமந்தா விக்ரமிடம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த சிலர் சமந்தாவைக் கடத்த திட்டமிடுகிறார்கள். அந்த திட்டத்தை பசுபதி செயல்படுத்துகிறார். விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது, என்பது தெரியாமல், கடத்தப்பட்ட சமந்தாவை, உரியவரிடம் ஒப்படைக்கும் வேலையை விக்ரமிடமே கொடுக்கும் பசுபதி, காரில் என்ன இருக்கிறது என்பதை விக்ரமிடம் தெரிவிக்காமல், காரை டெலிவரி செய்யுமாறு கூறுகிறார்.
ஒரு கட்டத்தில், சமந்தா கடத்தப்பட்டிருப்பதை தெரிந்துக்கொள்ளும் விக்ரம், அவரை கடத்தச் சொன்னவர்களை அடித்து துவம்சம் செய்து சமந்தாவைக் காப்பாற்றுவதோடு, சமந்தாவைக் கடத்தச் சொன்ன மெயின் வில்லனை சந்திக்க சமந்தாவுடன், உத்தரகாண்டுக்கு செல்கிறார். இந்தியாவில் ஒரு மூளையில் இருந்து மற்றொரு மூளையில் உள்ள ஒரு பெண்ணை எதற்காக கடத்துகிறார்கள், கடத்தியவர்கள் யார், என்பதை தெரிந்துக்கொள்ளும் விக்ரம், அவர்களிடம் இருந்து சமந்தாவை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.
விக்ரம், இப்படி அதிவேக கார் ஓட்டுவதற்கும், பணம் சேர்ப்பதற்கும், குட்டி செண்டிமெண்ட் பிளாஸ்பேக் படத்தில் இருக்கிறது.
ஆங்கிலப் படத்தில் இருந்து கதையை சுட்டாலும், அதை படமாக்கும் போது, ஆயா சுட்ட வடையை காக்கா தூக்கிக்கொண்டுப் போன, கதைப் போலதான் படமாக்குவோம், என்று இயக்குநர் விஜல் மில்டன், அடித்துச் சொல்லியிருக்கிறார்.
விக்ரமை பொருத்தவரை கஷ்ட்டப்பட்டு நடித்தாலும் சரி, சாதாரணமாக நடித்தாலும் சரி, தனது வேலையை சரியாக செய்யக் கூடியவர். அப்படி தான் இந்த படத்திலையும் செய்திருக்கிறார்.
பாடல்களுக்கு மட்டுமே நாயகி, என்று இல்லாமல் இந்த படத்தில் சமந்தாவை சுற்றியே கதை நகர்கிறது. இருப்பினும், சமந்தாவுக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்க தோன்றும் அளவுக்குத் தான் அவருடைய, அதிரடி வேடம் அமைந்துள்ளது. ஆனால், முதல் பாதியில் வரும் வெகுலித்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
பசுபதி, அவருக்கும் மேலே இரண்டு வில்லன்கள் என்று படத்தில் மூன்று வில்லன்கள் இருந்தாலும், யாருமே எடுபடவில்லை. அதிலையும் பசுபதி வேற காமெடி வில்லனாக வலம் வருகிறார்.
டி.இமானின் இசையில் “ஏத்து...” என்ற பாடலும், பீஜியமும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.
படத்தை பொருத்தவரையில் ஆக்ஷன் மற்றும் ஜேசிங் காட்சிகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் எந்தவிதமான தனித்துவமும் இல்லை. அதே சமயம், கார் ஜேசிங் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து கிராபிக்ஸ் காட்சிகளும் அலங்கோலமாக உள்ளது.
விக்ரமால் தாறுமாறாக ஓட்டப்படும் காரைப் போல, திரைக்கதையும், பாட்டு மற்றும் சண்டைக்காட்சிகள் என்று தாறுமாறாக நகர்கிறது. ஆரம்பத்தில் அதிரடியாக காட்டப்படும் வில்லன்கள், பிறகு காமெடி பீஸ்களாவதும் படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
சின்ன படமாக இருந்தாலும், தனது ஒரிஜினல் கதையினால் பெரிய வெற்றிப் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன், பெரிய ஹீரோவை வைத்து மிகப்பெரிய அளவில் சரிக்கியிருக்கிறார்.

Comments
Post a Comment