நோட்டாவுக்கு புதிய சின்னம்
நோட்டாவுக்கு புதிய சின்னம்
தேர்தலின் போது யாருக்கும் வாக்களிக்கவிருப்பமில்லை என்பதனை தெரிவிக்கும் நோட்டா பட்டனுக்கென வாக்குப்பதிவு எந்திரத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம்.
இதுவரை நோட்டா பட்டனுக்கென தனி சின்னம் பொருத்தப்படவில்லை. தற்போது நோட்டாவை குறிக்கும் வகையில் புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் (x) என்ற பெருக்கல் சின்னம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Post a Comment