கடன் வட்டி குறைப்பு
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி 0.4 சதவீதம் குறைப்பு
ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான கடன் வட்டியை அரை சதவீதம் குறைத்ததையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டியை 0.4 சதவீதம் குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிக்கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதர வங்கிகள் பெறும் குறுகிய காலக்கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை அரை சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 7.25 சதவீதமாக இருந்த கடன் வட்டி தற்போது 6.75 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறைந்துள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறையும்.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததையடுத்து, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, 9.7 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களுக்கும் குறைந்தபட்சம் 0.40 சதவீதம் வட்டி குறைக்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு அக்டோபர் 5-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஆந்திரா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இன்று முதல் வட்டிவிகிதம் 9.75 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment