வங்கி கார்டுகளுக்கு கட்டண சலுகை
டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்
பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'🌷நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம் செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும், 'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
கட்டுப்படுத்த...
🌷இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால், கறுப்புப் பண உற்பத்தி மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. ஏனெனில், இந்த முறையில் பணம் செலுத்தும் போது, இருபுறமும் அதற்கான விவரங்கள் தெளிவாக இருக்கும் என்பதால், முறைகேடுக்கு வாய்ப்பில்லை என, மத்திய அரசு கருதுகிறது.இத்தகைய பணம் செலுத்தும் முறைகளால், பொய் கணக்கு எழுதுவது, செலுத்திய தொகைக்கு அதிகமாக கணக்கு காண்பிப்பது போன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியும்; நேர்மையான பண பரிமாற்றங்கள் நடைபெறும் என்பது மத்திய அரசின் கணிப்பு.இத்தகைய முறைகளில் அதிகமானோரை ஈடுபடுத்தவும், இத்தகைய முறைகளில் பணத்தை செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிப்படையான, எலக்ட்ரானிக் முறையில் பணத்தை செலுத்துவோருக்கு, குறிப்பிட்ட சதவீதம் வரிச் சலுகை, கட்டணச் சலுகை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
🌷அதுபோல, இந்த முறையில் பணத்தை பெறும் வர்த்தகர்கள், நிறுவனங்கள், அமைப்பிற்கும், குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது, டெபிட் கார்டு முறையில் பணத்தை பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்களுக்கு, 0.75 முதல், 1 சதவீதம் வரை ஊக்கப்பணம் வழங்கப்படுகிறது.
🌷ஊக்கத்தொகை :
🌷அந்த வகையில், அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது, ரயில் பயணத்திற்கு டிக்கெட் எடுக்கும் போது, சமையல் காஸ் சிலிண்டர் வாங்கும் போது, குறிப்பிட்ட தொகையை ஊக்கத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, கடந்த ஜூன் மாதம், வரைவு அறிக்கை ஒன்றை தயாரித்து, அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளுக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்தது. அவற்றில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், மத்திய அரசு குறிப்பு ஒன்றை தயாரித்துள்ளது.கேபினட் கூட்டத்தில் அந்த குறிப்பு விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதும், இ - பேமென்ட் முறைகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'🌷இ - பேமென்ட்' முறைகள்:
* 🌷கிரெடிட் கார்டு
* 🌷டெபிட் கார்டு
* 🌷இ.சி.எஸ்.,
*🌷என்.இ.எப்.டி.,
*🌷ஐ.எம்.பி.எஸ்.,
* 🌷நெட் பேங்கிங்
*🌷மொபைல் பேங்கிங்
🌷நன்மைகள் என்ன?
*🌷 மிகவும் எளிதானது; பாதுகாப்பானது; முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லாதது.
*🌷வங்கி அல்லது பணம் செலுத்தும் இடத்திற்கு நேரடியாக செல்லத் தேவையில்லை.
*🌷 பணத்தை கையில் வைத்திருக்கத் தேவையில்லை; இதனால், தொலைந்து போதல், திருடப்
படுதல் போன்ற பிரச்னை இல்லை
🌷* குறிப்பிட்ட நேரத்தில் தான் செயல்படுத்த முடியும் என்றில்லாமல், 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை செலுத்த முடியும்.
*🌷 எந்த நேரமும் விவர அறிக்கை பெற்றுக் கொள்ள முடியும்.
🌷தவறுகளுக்கும் வாய்ப்பு உள்ளது:
🌷இ - பேமென்ட் முறை எளிதாக இருந்தாலும், படித்தவர்களாலும், விவரம் அறிந்தவர்களாலும் தான், இணையதளங்கள், மொபைல் போன்களை பயன்படுத்தி, தவறின்றி பணத்தை செலுத்த முடியும். சிறு தவறு கூட, பணத்தை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.இணையதள முறைகேடுகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Comments
Post a Comment