வெள்ளி திரை விமர்சனம் - ஸ்ட்ராபெரி
வெள்ளி திரை விமர்சனம் - ஸ்ட்ராபெரி
கால் டாக்சி டிரைவரான பா.விஜயுடன் ஒரு ஆத்மா சுற்றுகிறது. இதை, ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நாயகி அவ்னி மோடியும், அவரது தந்தையுமான ஜோ மல்லுரியும் கண்டுபிடித்து, அந்த ஆவி குறித்த ரகசியத்தை பா.விஜயிடம் தெரிவிக்கிறார்கள். ஆவி ஒன்று தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது, என்பதை அறியும் பா.விஜய், அந்த ஆவியுடன் பேசுகிறார்.
ஆவியிடம் பேசிய பிறகு தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய பா.விஜய் திட்டம் போடுகிறார். அதே சமயம், ஆவி குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜோ மல்லூரி, பணத்திற்காக அந்த ஆவியை கட்டுப்படுத்தி, அந்த தொழிலதிபரை காப்பாற்ற முயற்சி செய்வதுடன், அந்த ஆவியை தனது அடிமையாக்க திட்டம் போடுகிறார்.
ஒரு பக்கம் ஆவியின் உதவியுடன் தொழிலதிபரை கொலை செய்ய பா.விஜய் முயற்சிக்க, மறுபக்கம் அந்த தொழிலதிபரோ, ஜோ மல்லூரியின் உதவியுடன் ஆவியைக் கட்டுப்படுத்தி, அந்த ஆவிக்கு துணையாக இருக்கும் பா.விஜயை கொலை செய்ய முயற்சிக்கிறார். இவர்களில் யாருடைய திட்டம் வெற்றி பெற்றது என்பதும், அந்த ஆவி யார்? எதற்காக அந்த தொழிலதிபரை கொலை செய்ய துடிக்கிறது? எதற்காக பா.விஜயுடன் இறக்கிறது? என்ற கேள்விகளுக்கு பதில் தான் படத்தின் மீதிக்கதை.
பேய் படங்கள் பார்ப்பதற்காகவே தமிழ் சினிமா ரசிகர்களில் ஒரு கூட்டம் உருவாகிவிட்டது. அவர்களுக்காக மட்டும் இன்றி மற்ற ரசிகர்களையும் கவரும் விதத்தில் பா.விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹீரோவாக நடிப்பில் பாஸ் மார்க் வாங்கும் பா.விஜய், நடனத்தில் தடுமாறுகிறார். ஆனால், சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார்.
ஆத்மாக்களைப் பற்றி ஆராய்ச்சி பண்ணும் வேடத்தில் வரும் அவ்னி மோடி, ரெகுலர் நாயகி வேடம் இல்லாமல் சற்று வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.
தனது குழந்தையின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராடும் சமுத்திரக்கனியும், அவரது மனைவியாக நடித்துள்ள தேவையானியும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளார்கள். குழந்தை மரணத்தை தாங்க முடியாமல் தேவயானி, மனநிலை பாதிக்கப்பட்டவராக நன்றாக நடித்துள்ளார்.
பேய் படங்களைப் பார்த்து குழந்தைகள் பயப்படும் என்பார்கள், ஆனால், தற்போது குழந்தைகள் தான் பேய் படங்களின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் யுவினா நடித்துள்ள வேடமும், அவரது நடிப்பும், குழந்தைகளிடம் உள்ள பேய் மோகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.
ரோபோ சங்கரின் காமெடிக் காட்சிகளின் அளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக சிரிக்க முடிகிறது. ஒரு சில காட்சிகளில் வரும் தம்பி ராமையாவின் போஷனும் படத்திற்கு குட் போட வைக்கிறது.
இசையமைப்பாளர் தாஜ் நூரின், இசையில் மெலோடி பாடல் ஒன்று மட்டுமே கேட்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் சிம்பு படத்தின் பாடல்களை விட மோசமாக உள்ளது. ஆனால், பின்னணி இசை பேய்களும் மிரண்டு போகும் அளவுக்கு உள்ளது. மாரவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
மற்ற பேய் படங்களில் வரும் பழி வாங்கும் சப்ஜக்ட் தான் இந்த பேய் படத்திலையும் உள்ளது என்றாலும், பேயாக வருபவர், அவர் எதற்காக பழி வாங்குகிறார், அவருடைய மரணம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் புதுசாக உள்ளது.
சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை செய்திகளில் படிப்பதோடு நாம் சென்றுவிட, அந்த தவறினால் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் மையக் கருவை அமைத்திருக்கும் பா.விஜய், பத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றை வைத்து, அதை ஒரு ஜனரஞ்சகமான, அதே சமயம் சமூக பிரச்சினையை சொல்லும் ஒரு படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
ஆத்மாக்கள் என்றால் என்ன? அவை ஏன் மக்களிடம் வருகிறது, எதற்காக வருகிறது, போன்றவற்றை பற்றி சொல்லும் காட்சிகள் சுவாரஷ்யமாக இருந்தாலும், தேவையில்லாத கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை அவ்வபோது குறைத்து விடுகிறது.

Comments
Post a Comment