நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்....
நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்....
கவிதை -திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர், அச்சரபாக்கம் ஒன்றியம்
அன்பு உள்ளங்களே
வண்ணங்களில் குழைத்து
எண்ணங்களை இழைக்கும்
ஓவியனின் அழகிய விரல்களால்
நான் நடனமாடுகின்றேன்...
என்னை யாரென்று
தெரிகிறதா
தூரிகை என்றால்
உமக்குப்
புரிகிறதா...
இது பலரும் அறியாத
பெயர்தான்...
விளம்பரம் இல்லாததால்
துயர்தான்...
இனியாவது தெரிந்துகொள்ளுங்கள்
என்னையும்
புரிந்துகொள்ளுங்கள்...
ஓவியனின் கற்பனைகளை
பிரதிபலிக்கும் கண்ணாடி
நானல்லவா ..
டாவின்சியின் மோனலிசா
ஓவியம் வரைந்து
வான்புகழ் பெற்றதில்
பங்கும் எனக்கு
உண்டல்லவா...
கலைகளில் ஒன்று
ஓவியம்...
நான் படைப்பதோ
அனைத்தும் காவியம்...
சுவரில் பார்க்கும் ஓவியங்களெல்லாம்
உங்களில் பலரை
மயக்குவதுண்டு..
ஆனால் அவைகளை
வரையும்போதெல்லாம்
உடல் தேய்ந்து
பலநேரம் நான்
மயங்கியதுண்டு...
என் உடலை வருத்தி
ஓவியங்களை படைக்கின்றேன்
நீங்கள் ரசிப்பதற்காக..
பல்வண்ணங்களுடன் இணைந்து
திறம்பட பணிபுரிகின்றேன்
நீங்கள் புசிப்பதற்காக...
அரசர்கள் ஆண்ட அரண்மனைகளிலும்
அவர்கள் கட்டிய கோயில்களிலும்
எத்தனை எத்தனை
ஓவியங்கள்..
எல்லாம் எங்கள் கரம்படிந்த
ஓவியங்கள்..
அந்த கறைபடியாத ஓவியங்கள்...
இலக்கிய நூல்களையும்
இதிகாசங்களையும் சுவற்றில்
அழகுற வடிக்கின்றோம்..
நிலவு சூரியன் நட்சத்திரங்கள்
என அனைத்தையும்
படைக்கின்றோம்..
இயற்கை எழில்கொஞ்சும்
மலைகளையும் ஆழிகளையும்
நேரில் காண்பதுபோல்
வரைகின்றோம்..
யாவரையும் மெய்சிலிர்க்க
வைக்கின்றோம்....
சித்தனவாசலின் சித்திரம்
இன்றளவும் ஒரு
சரித்திரம்..
எங்கள் பணியோ அதில்
தனித்திறம்...
தீபங்கள் ஏற்றும்போது
தீக்குச்சிகள்
தியாகிகள் ஆகின்றன..
ஓவியங்களை படைப்பதற்கு
இந்த தூரிகைகளும்
துயில் உரிக்கின்றன..
உடன் உயிலும் எழுதுகின்றன
புகழ் ஓவியனக்கே சொந்தமென்று..
-பஞ்சாவின் தேடல் என்னும்
கவிதைத் தொகுப்பிலிருந்து..
கவிதை -திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர், அச்சரபாக்கம் ஒன்றியம்
அன்பு உள்ளங்களே
வண்ணங்களில் குழைத்து
எண்ணங்களை இழைக்கும்
ஓவியனின் அழகிய விரல்களால்
நான் நடனமாடுகின்றேன்...
என்னை யாரென்று
தெரிகிறதா
தூரிகை என்றால்
உமக்குப்
புரிகிறதா...
இது பலரும் அறியாத
பெயர்தான்...
விளம்பரம் இல்லாததால்
துயர்தான்...
இனியாவது தெரிந்துகொள்ளுங்கள்
என்னையும்
புரிந்துகொள்ளுங்கள்...
ஓவியனின் கற்பனைகளை
பிரதிபலிக்கும் கண்ணாடி
நானல்லவா ..
டாவின்சியின் மோனலிசா
ஓவியம் வரைந்து
வான்புகழ் பெற்றதில்
பங்கும் எனக்கு
உண்டல்லவா...
கலைகளில் ஒன்று
ஓவியம்...
நான் படைப்பதோ
அனைத்தும் காவியம்...
சுவரில் பார்க்கும் ஓவியங்களெல்லாம்
உங்களில் பலரை
மயக்குவதுண்டு..
ஆனால் அவைகளை
வரையும்போதெல்லாம்
உடல் தேய்ந்து
பலநேரம் நான்
மயங்கியதுண்டு...
என் உடலை வருத்தி
ஓவியங்களை படைக்கின்றேன்
நீங்கள் ரசிப்பதற்காக..
பல்வண்ணங்களுடன் இணைந்து
திறம்பட பணிபுரிகின்றேன்
நீங்கள் புசிப்பதற்காக...
அரசர்கள் ஆண்ட அரண்மனைகளிலும்
அவர்கள் கட்டிய கோயில்களிலும்
எத்தனை எத்தனை
ஓவியங்கள்..
எல்லாம் எங்கள் கரம்படிந்த
ஓவியங்கள்..
அந்த கறைபடியாத ஓவியங்கள்...
இலக்கிய நூல்களையும்
இதிகாசங்களையும் சுவற்றில்
அழகுற வடிக்கின்றோம்..
நிலவு சூரியன் நட்சத்திரங்கள்
என அனைத்தையும்
படைக்கின்றோம்..
இயற்கை எழில்கொஞ்சும்
மலைகளையும் ஆழிகளையும்
நேரில் காண்பதுபோல்
வரைகின்றோம்..
யாவரையும் மெய்சிலிர்க்க
வைக்கின்றோம்....
சித்தனவாசலின் சித்திரம்
இன்றளவும் ஒரு
சரித்திரம்..
எங்கள் பணியோ அதில்
தனித்திறம்...
தீபங்கள் ஏற்றும்போது
தீக்குச்சிகள்
தியாகிகள் ஆகின்றன..
ஓவியங்களை படைப்பதற்கு
இந்த தூரிகைகளும்
துயில் உரிக்கின்றன..
உடன் உயிலும் எழுதுகின்றன
புகழ் ஓவியனக்கே சொந்தமென்று..
-பஞ்சாவின் தேடல் என்னும்
கவிதைத் தொகுப்பிலிருந்து..
Comments
Post a Comment