கல்வி உதவித்தொகை: சிறுபான்மையினரு
கல்வி உதவித்தொகை: சிறுபான்மையினருக்கான உதவித்தொகை
🌷இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள் ஆகியோரின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசு பணிகளில் அதிகளவு சேரும் வகையில் அவர்கள் பல்வேறு தேர்வு வாரியங்கள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உதவித்தொகையையும் வழங்குகிறது.
🌷மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் அதேபோல், டி.என்.பி.எஸ்.சி. உள்பட அந்தந்த மாநிலங்களின் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்துகின்ற முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றிபெறும் சிறுபான்மை வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்குத் தயாராவதற்காக இந்தச் சிறப்பு உதவித்தொகையை மத்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் வழங்குகிறது.
🌷பணிக்கான தேர்வுகள்
‘🌷கெஜட்டட்’ பணி என அழைக்கப்படுகிற பணிகளுக்கான (சிவில் சர்வீஸ் மற்றும் குரூப்-ஏ அதிகாரி பணிகள், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பணி) தேர்வாக இருப்பின் ரூ.50 ஆயிரமும், ‘கெஜட்டட்’ அல்லாத குரூப்-பி நிலையிலான பணிக்கான தேர்வாக இருந்தால் ரூ.25 ஆயிரமும் பெறலாம். இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ஆன்லைன் மூலமாகச் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மெயின் தேர்வுக்குப் புத்தகங்கள் வாங்கவோ, ஏதேனும் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கவோ இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
🌷இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி. அல்லது எஸ்.எஸ்.சி. அல்லது டி.என்.பி.எஸ்.சி. நடத்துகின்ற முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.
🌷முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியான 30 நாட்களில் மத்தியச் சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டம் பற்றிய முழு விவரங்கள், விண்ணப்பப் படிவ மாதிரி ஆகியவற்றைச் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.minorityaffairs.gov.in) தெரிந்துகொள்ளலாம்.

Comments
Post a Comment