வெள்ளி திரை விமர்சனம்- VSOP
வெள்ளி திரை விமர்சனம்- VSOP
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஆர்யாவின் 25-வது படம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் சுமாரான வெற்றியை மறக்கடிக்கும்வகையில் இயக்குநர் எம்.ராஜேஷுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய படம்.. இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் தன்னுடைய டிரேட் மார்க் கதையோடு, அதே பாணியிலான திரைக்கதையோடு மறுபடியும் சிரிக்க வைக்க வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
சரவணன் என்கிற ஆர்யாவும், வாசு என்கிற சந்தானமும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ஆர்யாவின் அப்பா காலமான சூழலில் ஆர்யாவை சந்தானத்தின் வீட்டில் விட்டுவிட்டுத்தான் அவரது அம்மா வேலைக்குச் செல்வாராம். அப்படியொரு சூழலில் டிரவுசர் போட்ட காலத்தில் இருந்தே ரெண்டு பேரும் ஒண்ணுமண்ணா வளர்ந்திருக்காங்க. இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு மொபைல் கடை நடத்துகிறார்கள். ராத்திரில வழக்கம்போல சேர்ந்தே சரக்கடிக்கிறார்கள்.
ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மா ரேணுகா வற்புறுத்துகிறார். ஆர்யா விளையாட்டுத்தனமான பிள்ளையாகவே இருப்பதால் அதனை ஏற்க மறுக்கிறார். ஆனால் சந்தானம் புத்திசாலி. ‘தாமிரபரணி’ பானுவை பார்த்தவுடன் காதல் கொண்டு கல்யாணம்வரைக்கும் கொண்டு போய் குடும்பஸ்தராகிவிடுகிறார்.
ஆனால் சந்தானத்திற்கு ஆர்யாவுடனான நெருக்கம் பானுவுக்கு பிடிக்கவில்லை. ஆர்யா செய்த சிறுபிள்ளைத்தனமான சேட்டையால் அவர்களுடைய முதலிரவு கட்டில் உடைந்து பத்து நாள் ஆஸ்பத்திரியில் படுக்கிறார் சந்தானம். ஏற்கெனவே தன்னை இண்டர்வியூ என்ற பெயரில் ராகிங் செய்த ஆர்யா மீது கடுப்பில் இருந்த பானு, இப்போது ஆர்யாவுடனான நட்பைத் துண்டித்தால்தான் தாம்பத்தியம். இல்லையேல் இப்படியே கிடக்க வேண்டியதுதான் என்று உத்தரவு போடுகிறார்.
நட்பை கத்தரிக்க முடியாது. பதிலுக்கு ஆர்யாவுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் நம் பிரச்சனை தீருமே என்றெண்ணி ஆர்யாவுக்கு பெண் பார்க்க மேட்ரிமோனியல் டாட் காம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் சந்தானம். அங்கே மெழுகு பொம்மையாக வந்து நிற்கும் கஸ்டமர் கேர் ஆபீஸர் தமன்னாவை பார்த்தவுடன் ஐஸ்கிரீமாக உருகுகிறார் ஆர்யா. காதலித்தால் இவளைத்தான்.. கட்டினாலும் இவளைத்தான்.. என்று சொல்லி தமன்னா மீது காதல் கொண்டு அலைகிறார்.
இந்தக் காதலுக்காக பல ரீல்களில் தொடர்ந்து சந்தானம் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்க அது படு சொதப்பலாகி முடிந்து கொண்டேயிருக்கிறது. கடைசியில் காதல் ஓகேயாகும் சூழலில் நட்புக்கு வேட்டு வைக்கிறார் தமன்னா. சந்தானத்துடனான நட்பைத் துண்டித்தால்தான் நமக்கு கல்யாணம் என்று ஆர்யாவிடம் கண்டிஷன் போடுகிறார்.
இதற்கு மேல் என்ன நடக்கும் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ். எல்லாரும் நினைக்கும் அதே சுப முடிவுதான். ஆனால் அது எப்படி முடிகிறது என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வழக்கமான நட்பு காதல் சரக்கு சைட்டிஷ் நிறைய காமெடி என ராஜேஷ் பார்முலா என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல...மொத்தத்தில் ரிலாக்ஸாக சிரிக்க வைக்கும் படம் வாசுவும் சரவணனும்...

Comments
Post a Comment