GATE 2016
கேட் 2016ம் ஆண்டு தேர்வுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் மாணவர்களுக்கான திறனறி தேர்வுக்கான பதிவு செப்டம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு 2016ம் ஆண்டு ஜனவரி 30ம் மற்றும் பிப்ரவரி 7ம் தேதிகளுக்கிடையே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் மாதம் 1ம் தேதியாகும். தேர்வு மையத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20ம் தேதியாகும். டிசம்பர் 17ம்தேதி முதல் தேர்வு நுழைவுச் சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தேர்வு முடிவுகள் மார்ச்- 19ம் தேதி 2016ஆண்டில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.gate.iisc.ernet.in இணயத்தளத்தில் சென்று பார்க்கலாம்.
Comments
Post a Comment