தமிழக சட்டபேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை நாளை மறுதினம் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை 19 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் கடந்த வாரம் அறிவித்தார். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்வதற்கான, அலுவல் ஆய்வு குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, திமுக கொறடா சக்கரபாணி, பீம்ராவ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் என்னென்ன மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டம் நாளை மறுதினம் காலை 10 மணிக்கு கூடியதும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இதையடுத்து அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
மீண்டும் 25ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் வீட்டு வசதித்துறை, வேளாண்மை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். 26ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, கைத்தறித்துறை, 27ம் தேதி பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம். 28ம் தேதி ஓணம் பண்டிகை விடுமுறை, 29, 30ம் தேதி விடுமுறையாகும். 31ம் தேதி சமூகநலத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மீது விவாதம். செப்டம்பர் 1ம் தேதி உயர் கல்வி, பள்ளி கல்வித்துறை, 2ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலாத்துறை, 3ம் தேதி கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, 4ம் தேதி தொழில்துறை, போக்குவரத்துத்துறை மீது விவாதம். 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் பேரவைக்கு விடுமுறையாகும்.
14ம் தேதி வருவாய்த்துறை, செய்தித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, 15ம் தேதி கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகள் மீது விவாதம். 16ம் தேதி ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை, 18ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 19, 20ம் தேதி விடுமுறையாகும். 21ம் தேதி வணிவரித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, 22ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, 23ம் தேதி சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, 24ம் தேதி பக்ரீத் விடுமுறை, 25ம் தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, 26, 27ம் தேதி விடுமுறை. 28ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை, 29ம் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம், நிதித்துறை, அரசினர் சட்டமுன்வடிவுகள் மற்றும் ஏனைய அரசினர் அலுவல்கள் மீது விவாதம் நடைபெற்று, இந்த கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். முதல் நாள் இரங்கல் தீர்மானம், 18 நாள் மானிய கோரிக்கை மீது விவாதம் என மொத்தம் 19 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனரே? தேமுதிக பற்றி இப்போது பேச முடியாது. அந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. இவ்வாறு பேரவைத் தலைவர் தனபால் கூறினார்.
பேரவை கூட்டத்துக்கு 18 நாட்கள் விடுமுறை
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 24ம் தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 37 நாட்களில் 19 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. மீதமுள்ள 18 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்துக்கு விடுமுறையாகும். சனி, ஞாயிறு், ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, பக்ரீத் மற்றும் சென்னையில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீஸ், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறைகள் தவிர அமைச்சர்கள் கவனிக்கும் மானிய கோரிக்கைகள் மீது ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அதனால் தினசரி காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளது.

Comments
Post a Comment