பங்கு சந்தை பெரிய வீழ்ச்சி
சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு: ரூ.7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் திங்களன்று 1,700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது.
இந்தச் சரிவினால் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடிகளை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி.எஸ்.இ. பங்குக் குறியீடு 1,700 புள்ளிகள் சரிவடைந்து 25,681 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்டி 436 புள்ளிகள் சரிந்து 7,863-ஆகவும் உள்ளன.
லிஸ்டட் பங்குகளின் ஒட்டு மொத்த மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும் முதலீட்டாளர்கள் தொகை ரூ.7 லட்சம் கோடி சரிவு கண்டுள்ளது.
10 மிகப்பெரிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டும், சந்தை மூலதனம் என்ற அளவில், ரூ.2 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது.
கடந்த ஏழரை ஆண்டுகளின் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவாகும் இது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டுச் சரிவு வரலாற்றில் 3-வது மிகப்பெரிய சரிவாகும் இது. கடந்த ஜனவரி 21, 2008-ல் சென்செக்ஸ் 2062 புள்ளிகள் சரிவு கண்டது, அதன் பிறகு தற்போது பெரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
ரியல்டி, மின்சாரம், கச்சா மற்றும் எரிவாயு, வங்கிகள் குறியீடு, ஆட்டோ, உலோகம், மூலதனப் பொருட்கள், மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பங்குகள் பெருமளவு விற்கப்பட்டதால் இந்த சரிவு ஏற்பட்டது.
சரிவு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறும் போது, "மற்ற நாட்டுப் பொருளாதாரங்களை ஒப்பிடும் போது நாம் சிறந்த நிலையிலேயே உள்ளோம், பரந்துபட்ட பொருளாதார காரணிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று சந்தைகளுக்கு உறுதி அளிக்கிறேன். நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலர்களாக உள்ளது” என்றார்.

Comments
Post a Comment