ஆதார் தேவையில்லை தேர்தல் கமிஷன்
வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மேலும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேசமயம், போலிகளைக் களையெடுப்பதற்கான என்இஆர்பிஏபி- திட்டத்தின் இதர வழிமுறைகள் தொடர்ந்து கையாளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மையாக்குதல் மற்றும் நம்பகமாக்குதல் திட்டத்தை (என்இஆர்பிஏபி) தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வந்தது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. போலி வாக்காளர்களைக் களையெடுப்பதே இதன் நோக்கம் என்று கூறி இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.
இதனையடுத்து சுமார்13 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் அரசு திட்டங்களை பெற ஆதார் எண் அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்தே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தும் முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

Comments
Post a Comment