பாதுகாப்பு சுதந்திர தின விழா
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 69வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. கடற்கரை மாநிலமான தமிழகத்தை பொறுத்தவரையில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்கக்கூடும் என்பதால் 13 கடலோர மாவட்டங்களில் கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்கள், கோயில்கள், சர்ச்கள், மசூதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அணு உலை அமைந்துள்ள கூடங்குளம், கல்பாக்கம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. . மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் 12 காவல் மாவட்ட எல்லையான பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அடையாறு, தி.நகர், பரங்கிமலை, திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர், புளியந்தோப்பு, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இதற்காக 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், மால்கள், கிளப்புகள், திரையரங்குகள் உள்ளன என்ற பட்டியலும் தயாராகி வருகிறது. அதன்படி சந்தேக நபர்கள் இங்கு தங்கி உள்ளனரா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற உள்ள விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி அசோக் குமார் அனைத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசித்து நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். சென்னையில் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழா நடைபெறும் தலைமைச் செயலக பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தைச் சுற்றிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும்போது அந்த வழியாக விமானங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் போலீசார் ரோந்துப் பணிகளையும், வாகனச் சோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Comments
Post a Comment