வெள்ளி திரை விமர்சனம் - சகலகலாவல்லவன்
வெள்ளி திரை விமர்சனம் - சகலகலாவல்லவன்
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகரான கமலஹாசனுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்த மாபெரும் வெற்றிப் படம் சகலகலாவல்லவன். அதே பெயருடன் இப்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் சகலகலாவல்லவன், அதே போன்ற வெற்றியைப் பெறுமா?
சக்தி (ஜெயம் ரவி) மற்றும் ‘சின்னப்புத்தி’ சின்னச்சாமி (சூரி) இருவரும் தென்காசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பகையில் இருக்கும் உறவினர்கள். சின்னச்சாமியின் அத்தை மகள் செல்வியைக் (அஞ்சலி) கண்டவுடன் காதலில் விழும் சக்தி அதற்காக சின்னச்சாமி குடும்பத்துடன் நட்பாகிறான். பதிலுக்கு சென்னையிலிருந்து வரும் சக்தியின் அத்தை மகள் திவ்யாவை (திரிஷா) மணக்க விரும்புகிறான் சின்னச்சாமி. ஆனால் திவ்யாவுக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது.
அந்தத் திருமணம் கடைசி நிமிடத்தில் நின்றுவிட தந்தை (பிரபு) சொல் தட்டாத சக்தி திவ்யாவை மணக்கிறான். ஆனால் இருவருக்கும் திருமண வாழ்க்கை ஒத்துப் போகாததால் சக்தியிடம் ஒரே மாதத்தில் விவாகரத்துக் கோருகிறாள், தன் ஊருக்கு வந்து ற்றோருடன் ஒரு மாதம் வாழ ஒப்புக்கொண்டால் விவாகரத்துக்கு சம்மதம் தருவதாகக் கூறுகிறான். இந்த ஒப்பந்தத்தை திவ்யா ஏற்கிறாள்.
சக்தி-திவ்யா ஜோடி பிரிந்ததா, சேர்ந்து வாழ்ந்ததா என்பதே மீதிக் கதை.
முழுக்க முழுக்க நகைச்சுவையை நம்பி எடுக்கப்பட்டுள்ள படம் இது. படத்தின் நகைச்சுவைப் பகுதிகள் பெருமளவில் சிர்க்க வைப்பதால் அந்த வகையில் கேளிக்கைக்குப் பஞ்சமில்லை.
முதல் பாதி ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் அரசியல்வாதியான சூரி மற்றும் அவரது உதவியாளர்களின். நகைச்சுவை அஞ்சலியின் கவர்ச்சி ஆகியவற்றோடு நகர்கிறது. இரண்டாம் பாதியில் கவர்ச்சிக்கு பதில் செண்டிமெண்ட்.
லாஜிக், பார்த்து கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் படம் உகந்ததல்ல படத்தின் மையப் பாத்திரங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை அழுத்தமாகப் பதிவு செய்ய்வோ. அவர்கள் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் ஆகியவை நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கோ எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆனால் இந்தக் குறைகளையெல்லாம் படத்தின் நகைச்சுவை மறக்கச் செய்கிறது.
ஜெயம் ரவிக்கு இது சவாலான வேடமல்ல. ஆனால் ஒரு கமர்ஷியல் சினிமா நாயகனுக்கு தேவையான நகைச்சுவை, நடனம், சண்டை, உணர்ச்சிகர நடிப்பு ஆகியவற்றை குறையின்றி நிறைவேற்றுகிறார். அஞ்சலி மற்றும் திரிஷா இருவருக்கும் சமமான பாத்திரங்கள், முன்னவருக்கு கிளாமரிலும் பின்னவருக்கு நகைச்சுவை மற்றும் செண்டிமண்டிலும் பங்கிருக்கிறது, பாத்திரம் கோரும் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அவர்களின் பாத்திரங்கள் பலவீனமாக இருப்பது அவர்கள் குற்றமல்லவே? பிரபு குறையின்றிச் செய்திருக்கிறார்தான். ஆனால் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளை மனதுகொண்ட ஊர்த் தலைவர் அல்லது பெரிய மனிதராக அவரை எத்தனை முறை பார்ப்பது.
படத்தின் நகைச்சுவை அம்சத்தைத் தாங்கி நிற்பவர் சூரி.. ஊரில் அலப்பறை செய்து நாயகனிடமும் நாயகியரிடமும் மொக்கை வாங்கி தன் உதவியாளர்களாலேயே கிண்டலடிக்கப்படும் சின்னச்சாமியாக பின்னியெடுத்திருக்கிறார். அதிகபட்சம் இருபது நிமிடங்களுக்கு வந்து செல்லும் மூத்த காமடி நடிகர் விவேக் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்புகிறார். (அவர் பாணி இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு என்றாலும் எல்லை கடக்கவில்லை). ஓவர் டென்ஷன் ஆகும் காமெடி போலீசாக மொட்டை ராஜேந்திரன் தன் பங்குக்கு கலகலப்பூட்டுகிறார். அவரது பாத்திரத்துக்கு ஏற்படும் முடிவும் அதற்கு முன்பு அவருக்கு ஏற்படும் நிகழ்வுகளும் படத்தின் கடைசி நிமிடங்களை சிரிப்புத் தோரணமாக்குகின்றன.
தமன் இசையில் பாடல்கள் கேட்பதற்கு சுமார். ஆனால் இடைச்செறுகல்களாக வந்து வெறுப்பூட்டுகின்றன பின்னணி இசையில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை., ஒளிப்பதிவு (யு.கே.செந்தில்குமார்), படத்தொகுப்பு (ஆர்.கே.செல்வா) ஆகிய தொழில்நுட்ப சமாச்சாரங்களும் அப்படியே.
அதிகம் யோசிக்காமல். கவலைகளை மறந்து சிரிக்க விரும்பினால் இந்தப் படம் ஓடும் தியேட்டருக்குப் போய் வரலாம்.
மதிப்பெண்- 25/50

Comments
Post a Comment