மத அடிப்படையிலான கணக்கெடுப்பு 2015
மத அடிப்படையிலான கணக்கெடுப்பு விவரம் வெளியீடு: இந்திய மக்கள் தொகை 121 கோடி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் எண்ணிக்கையானது 0.7 குறைந்துள்ளது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது 96.63 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் ஆகும். முஸ்லீம்கள் 17.22 கோடி (சதவீதம் 14.2), கிறிஸ்துவர்கள் 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), புத்த மதத்தினர் 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் 0.45 கோடி (0.4 சதவீதம்), மற்ற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது 0.79 கோடி (0.7 சதவீதம்) என்ற அளவில் உள்ளனர்.
எந்த ஒரு மதத்தையோ அல்லது நம்பிக்கையோ பின்பற்றாதவர்கள் அல்லது தங்கள் மதங்களை பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை 0.29 கோடி (0.2 சதவீதம்) உள்ளது என இந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 102 கோடியாக இருந்தது. 2001-2011 இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமாக இருந்துள்ளது.
இதே காலத்தில் மதங்கள் வாரியான மக்கள் தொகை அதிகரிப்பு பின்வருமாறு: இந்துக்கள் 16.8 சதவீதம், முஸ்லீம் 24.6 சதவீதம், கிறிஸ்துவர் 15.5 சதவீதம், சீக்கிய 8.4 சதவீதம், புத்தம் 6.1 சதவீதம், ஜெயின் 5.4 சதவீதம்.

Comments
Post a Comment