united india jobs 2015
வேலை வேண்டுமா?- யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள்
?
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 750 உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
பிளஸ் 2 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை. பட்டதாரிகள் எனில் மதிப்பெண் வரையறை எதுவும் இல்லை.
வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதியுடைய நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், கணினித் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் இதர போட்டித் தேர்வுகளைப் போன்றே ரீசனிங், பொது ஆங்கிலம், கணிதத் திறன், பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளிலிருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் ‘அப்ஜெக்டிவ்’ முறையில் இடம்பெற்றிருக்கும்.
எழுத்துத் தேர்வு
ஆன்லைன் வழியான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு (ஜூலை 7) முதல் வருகிற 20-ந் தேதிக்குள் ஆன்லைனில் (www.uiic.co.in) விண்ணப்பிக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு அனைத்துப் படிகளையும் சேர்த்து மாதச் சம்பளம் ரூ.20 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். விரைவில் ஊதியம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
?
Comments
Post a Comment