வெள்ளி திரை விமர்சனம் -யாகாவராயினும் நா காக்க

நடிகர் :ஆதி நடிகை :நிக்கி கல்ராணி இயக்குனர் :சத்யா பிரபாஸ் பினிசெட்டி இசை :பிரவின், ஷியாம், பிரசன் ஒளிப்பதிவு :N.சண்முகசுந்தரம்
கதாநாயகன்–கதாநாயகி: ஆதி–நிக்கி கல்ராணி.
டைரக்ஷன்: சத்ய பிரபாஸ்.
கதையின் கரு: போதையில் செய்த தவறின் விபரீத விளைவுகள்.
ஆதியும், அவருடைய மூன்று நண்பர்களும் கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பை முடித்து விட்டால் பிரிய நேரிடும் என்று பரீட்சை எழுதுவதை தவிர்க்கிறார்கள். நான்கு பேரும் புத்தாண்டை கொண்டாட ஒரு ஓட்டலுக்கு போகிறார்கள். அங்கே நண்பர்களில் ஒருவர் ரிச்சா பலோடை செல்போனில் படம் பிடிக்கிறார்.
அதை ரிச்சா பலோட் கண்டிக்க–ஆதியின் நண்பர்களுக்கும், ரிச்சா பலோடின் நண்பருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அது, கைகலப்பாக மாற–போலீஸ் வருகிறது. ஆதியின் நண்பர்களில் ஒருவர், போலீஸ் கமிஷனர் நாசரின் மகன். அவரைப் பார்த்ததும் விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி சேரன்ராஜ், ரிச்சா பலோடிடம் அவமரியாதையாக நடந்து கொள்கிறார். ‘‘விபசார வழக்கில் கைது செய்து விடுவேன்’’ என்று மிரட்டுவதுடன், கைநீட்டியும் விடுகிறார்.
போலீஸ் அதிகாரியினால் தாக்கப்பட்ட ரிச்சா பலோட், மும்பை தாதா முதலியாரின் மகள். அவர் தாக்கப்பட்ட விவரத்தை தனது அண்ணன் ஹரீசிடம் தெரிவிக்க–ஹரீஸ் கொலை வெறி கொள்கிறார். ஆதியின் நண்பர்கள் மூன்று பேரும் வசதியானவர்கள் என்பதால், அவர்களை பெற்றோர்கள் ஊரை விட்டு கடத்தி பாதுகாப்பாக வைக்கிறார்கள்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆதி, அக்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு இல்லாமல் நிற்கிறார். அவரிடம், லோக்கல் தாதா பசுபதி, ‘‘நீ மும்பைக்குப் போய் முதலியாரிடம் மன்னிப்பு கேட்டு விடு’’ என்று சொல்கிறார். அதன்படி, ஆதி மும்பைக்குப் போய் முதலியாரை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார்.
அப்போதுதான் ஆதிக்கு முதலியாரின் மகள் ரிச்சா பலோட் காணாமல் போன விவரம் தெரியவருகிறது. ஆதியும், நண்பர்களும் என்ன ஆகிறார்கள், ரிச்சா பலோட் என்ன ஆகிறார்? என்பது பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’
நட்புக்காக–நண்பர்களை பாதுகாப்பதற்காக உயிர் பணயம் வைக்கும் துணிச்சல் மிகுந்த இளைஞராக ஆதி, மொத்த படத்தையும் தூக்கிப் பிடிக்கிறார். நிக்கி கல்ராணியுடனான காதலில் ‘காமெடி,’ முதலியாரை சந்திக்க மும்பை சென்று அடி வாங்கி ரத்தம் சிந்தியும் நண்பர்களை காட்டிக் கொடுக்காத வீரம், முதலியார் முன்பே அவருடைய ஆட்களை துவம்சம் செய்கிற துணிச்சல் என அதிரடி நாயகனுக்குரிய அத்தனை வேலைகளையும் அபாரமாக செய்து இருக்கிறார், ஆதி.
ஆதியை விரட்டி விரட்டி காதலிப்பவராக, நிக்கி கல்ராணி. இடைவேளை வரைதான் இவருக்கு வேலை. முதலியாராக மிதுன் சக்ரவர்த்தி. அவருடைய தோற்றமும், அலட்டிக் கொள்ளாத நடிப்பும், கதாபாத்திரத்துக்கு மரியாதை சேர்க்கிறது.
போலீஸ் கமிஷனராக நாசர், ஆதியின் தாய்–தந்தையாக பிரகதி–நரேன், லோக்கல் தாதாவாக பசுபதி, முதலியாரின் மகளாக ரிச்சா பலோட், மகனாக ஹரீஷ், ரிச்சா பலோட் நண்பரின் முன்னாள் காதலியாக லட்சுமி ப்ரியா என படத்தில் நட்சத்திர கூட்டம் நிறைய.
என்.சண்முகசுந்தரத்தின் கேமரா, காட்சிகளின் தன்மைக்கேற்ப கடுமையாக உழைத்து இருக்கிறது. பிரசன் ப்ரவீன் ஷ்யாம் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை மிரட்டியிருக்கிறது.
முதல் படத்திலேயே தரமான டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார், சத்ய பிரபாஸ். கதாநாயகனை விரட்டியும், மிரட்டியும் காதலிக்கும் கதாநாயகி, அவரை கழற்றி விட நினைக்கும் கதாநாயகன், பீர் அடிக்கும் நண்பர்கள், ஆடல், பாடல் என்று வழக்கமான பாணியில் நகரும் கதை, நண்பர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப்பின், வேகம் பிடிக்கிறது. முதலியார் வீட்டுக்குள் ஆதி சிக்கிக் கொள்கிற காட்சியும், காதல் வெறி பிடித்த லட்சுமி ப்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளும் பதற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு போகின்றன.
படத்தின் நீளம், இரண்டு ‘கிளைமாக்ஸ்’ இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
Its from www.dailythanthi.com

Comments
Post a Comment