வெள்ளி திரை விமர்சனம் - பாகுபலி
வெள்ளி திரை விமர்சனம் - பாகுபலி
நான் ஈ, மகாதீரா என்று பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின், பிரம்மாண்ட படம் 'மகாபலி'.
தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் இல்லாத பிரபாஸும், ராணாவும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பும், காட்சிகளின் பிரம்மாண்டமும் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது.
பதவிக்காக ராஜ குடும்பத்தில் ஏற்படும் பங்காளி சண்டை தான் கதை. அந்த கதைக்கான திரைக்கதையும், கதாபாத்திர அமைப்பு மூலமும் இயக்குனர் ராஜமவுலி மிரட்டியிருக்கிறார்.
ராஜ பதவிக்காக ஆசைப்பட்டு, ராஜா பாகுபலியை, அவருடைய பெரியப்பாவின் மகனும், படைத்தலைவனுமான ராணா கொலை செய்து விடுகிறார். பிறகு பாகுபலியின் குழந்தையை கொலை செய்ய முயற்சிக்க, அவர்களிடம் இருந்து அந்த குழந்தையை ராணாவின் அம்மாவும், மகராணியுமான ரம்யா கிருஷ்ணன் காப்பாற்றி விட்டு இறந்து போகிறார்.
தான் ஒரு ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமல் ஆதிவாசி சமூகத்தில் வளரும் அந்த குழந்தை வளர்ந்தவுடன், தன்னை அறியாமலேயே, தனது நாட்டிற்கு செல்லும் சுழ்நிலை எற்பட, பிறகு அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
'பாகுபலி' படத்தின் கதையை கேட்பதை விட, அதை படமாக பார்ப்பது தான் ரசிகர்களுக்கான விருந்தாக அமையும். இந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்கே இயக்குனர் ராஜமவுலியை கொண்டாட வேண்டும்.
படத்தின் பலமே பிரம்மாண்டமும், போர்க்காட்சிகளும் தான். அதை இயக்குனர் ராஜமவுலியும் அவரது குழுவினரும் ரொம்ப சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் காட்டும் அறிவியும், உயரமான அந்த மலையும் பிரமிக்க வைக்கிறது. கிராப்பிக்ஸ் தான் என்றாலும், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சியா என்பதில் வியப்பு தான்.
படத்தின் நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா இருவரும் தங்களுடைய வேடத்திற்கு 100 சதவீதம் உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கம்பீரமான தோற்றம் அந்த வேடத்தை ரசிகர்கள் மனதில் ஆழ பதியவைக்கிறது.
நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் தோற்றமும், நடிப்பும் அவர்களுக்கான கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.
போராளியாக வரும் தமன்னாவை காட்டிலும், பிரபாஸுக்கு காதலியாக மாறும் தமன்னாவே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
மரகதமணியின் இசையில் பால்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. இதுபோன்ற படங்களில் நாம் வழக்கமாக கேட்கும் பின்னணி இசையையே வித்தியாசப்படுத்தி கொடுத்திருக்கிறார். எது நிஜம் எது கிராபிக்ஸ் என்று சில இடங்களில் நாம் குழம்பிப்போகும் அளவுக்கு செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.
பாகுபலி என்ற படம் இரண்டு பாகங்களாக இருந்தாலும், அவற்றை ரசிகர்கள் சரியான முறையில் புரிந்துக்கொள்ளும் விதத்தில் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் எட்டிடிங் சிறப்பாக அமைந்துள்ளது.
மகன் பிரபாஸுக்கு அம்மாவாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இந்த பாகத்தில் வேலை கொஞ்சம் தான் என்பதால், அடுத்த பாகத்தில் அவருடயை கதாபாத்திரத்தை பார்க்கலாம்.
பிரபாஸ் உயரமான மலையை ஏற முயற்சிப்பது, போர்க்காட்சிகள் போன்ற இடங்களில் கிராபிக்ஸ் மிரள வைத்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கிராபிஸ் இடம்பெறுவதால் ஒரிஜினாலிட்டி மிஸ்ஸாகிறது. மேலும், படத்தில் வரும் அந்த ஐட்டம் டான்ஸ் வேகமாக பயணிக்கும் திரைக்கதைக்கு மிகப்பெரிய ஸ்பீட் பிரேக்கராக அமைகிறது.
இருப்பினும், தன்னால் இப்படிப்பட்ட படங்கள் தான் எடுக்க முடியும், என்று ஒரே ரோட்டில் பயணிக்காமல், படத்திற்கு படம் களத்தை மாற்றி வெற்றி பெறும் இயக்குனர் ராஜமவுலியின் சினிமா வாழ்க்கையில் பாகுபலி ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.

Comments
Post a Comment