என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கிரிமினல் பட்டியலில் பிரதமர் மோடி: மன்னிப்பு கேட்டது "குசும்பு' கூகுள்:
புதுடில்லி: "தேடு பொறி' (சர்ச் இன்ஜின்)யில் பிரதமர் மோடியை தவறாக இடம் பெறச் செய்ததற்காக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உலகின் முன்னணி தேடுபொறியாக இருப்பது கூகுள். விரல் சொடுக்கில் உலகின் அனைத்து தகவல்கள் மட்டுமல்லாது படங்களையும் கொண்டு வந்து கொட்டும்.
சமீபத்தில் மோடி பற்றி கூகுளில் தேடியபோது, "இந்தியாவின் 10 "டாப்' கிரிமினல்கள்' என்ற வகையின் கீழ் படங்கள் வந்தன. இதில் பிரதமர் மோடி, ஒசாமா பின்லாடன், தாவூத் இப்ராஹிம், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பெயர்களும், படங்களும் இடம் பெற்றுள்ளன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனாளிகள், கூகுளுக்கு கண்டனத்தையும் புகாரையும் தெரிவித்தனர்.
இதையடுத்து கூகுள், தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்ட அறிக்கையில், ""ஒரு பிரிட்டன் பத்திரிகை பதிவேற்றிய தகவலால் இந்த தவறு நடந்துள்ளது'' என விளக்கம் அளித்துள்ளது.

Comments
Post a Comment