வெள்ளி திரை விமர்சனம் - காவல்
வெள்ளி திரை விமர்சனம் - காவல்
கதாநாயகன்–கதாநாயகி: விமல்–கீதா.
கதை நாயகன்: சமுத்திரக்கனி.
டைரக்ஷன்: நாகேந்திரன்.
கதையின் கரு: கூலிப்படையும், ஒரு போலீஸ் அதிகாரியும்...
‘‘1995–ம் ஆண்டில் இருந்து 2014–ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில், 34,712 கொலைகள் நடந்துள்ளன. கொலை செய்யப்பட்டவனுக்கு எதற்காக செத்தோம்? என்று தெரியாது. கொலைகாரனுக்கு எதற்காக சாகடித்தோம்? என்று தெரியாது என்ற புள்ளி விவரமும், முன்னுரையுமாக தொடங்குகிறது, படம்.
கூலிப்படை தலைவன் தேவாவும், அவருடைய கூட்டாளிகளும் தொடர் கொலைகள் செய்து நகரை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை பிடிக்க விசேஷ போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நியமிக்கப்படுகிறார். அவர் கடற்கரையில் பலூன் வியாபாரி போல் இருந்து கொண்டு கூலிப்படையின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார். தேவாவை ‘என்கவுன்டர்’ செய்ய வியூகம் அமைக்கிறார்.
போலீஸ் ஏட்டு எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகன் விமல், விழா நிகழ்ச்சி அமைப்பாளர் கீதாவை காதலிக்கிறார். கீதாவுக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அதை அவர் விமலிடம் கேட்கிறார். ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரத்தை முடித்துக் கொடுத்தால் பணம் தருவதாக விமலிடம், நண்பர் நமோ நாராயணன் கூறுகிறார். அதற்கு விமல் சம்மதித்து, கூலிப்படை தலைவன் தேவாவிடம் உதவி கேட்கிறார்.
விமலின் பேச்சை நம்பி நகருக்குள் வரும் தேவாவை போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி, ‘என்கவுன்டர்’ செய்ய முயற்சிக்கிறார். அதில் இருந்து தேவா தப்பி விடுகிறார். தன்னை காட்டிக் கொடுத்து விட்டான் என்ற ஆத்திரத்தில் விமலை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார், தேவா. அவரிடம் இருந்து விமல் தப்பினாரா, தேவா தீர்த்துக்கட்டப்பட்டாரா, இல்லையா? என்பது மீதி கதை.
கூலிப்படையினரால் நடைபெறும் கொடூரங்களையும், அராஜகங்களையும் ரத்தமும் சதையுமாக படம் பிடித்து இருக்கிறார், டைரக்டர் நாகேந்திரன்.
கூலிப்படை தலைவன் தேவாவின் நட்பு வட்டத்தில் ஒருவராக விமலை காட்டி, அவருக்கு இவரும், இவருக்கு அவரும் உதவுவது போல் கதையை வளர்த்து, ஒரு கட்டத்தில் இருவரையும் எதிரும், புதிருமாக கொண்டு வந்திருப்பது, திரைக்கதையில் பெரிய திருப்பம்.
இப்படி யூகிக்க முடியாத காட்சிகளுடன் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபர என்று இருக்கையின் விளிம்பில் அமர வைக்கிறது. ‘‘என் மகன் பணத்துக்காக போலீஸ் வேலைக்கு வரவில்லை’’ என்று கொலை செய்யப்பட்ட ஆல்வின் சுதனின் அப்பா கூறுவதும், ‘‘இதுமாதிரி அங்கங்கே ஒன்றிரண்டு நல்லவங்க இருப்பதால்தான் பாதி காட்டை அழித்த பிறகும் மழை பெய்கிறது’’ என்று சமுத்திரக்கனி கூறுவதும், ஜீவனுள்ள வசன வரிகள்.
படத்தின் கதாநாயகன் விமல் என்பதால் அவருக்கு ஒரு காதலையும், இரண்டு சண்டை காட்சிகளையும் கொடுத்து இருக்கிறார்கள். கதாநாயகி கீதா, வசீகரமான முகம். கூலிப்படை தலைவனிடம் அவர் சிக்குகிற காட்சியில், அய்யோ பாவமாக தெரிகிறார். தேவா, கூலிப்படை தலைவனாக மிரட்டியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனிதான் கதைக்கு தூணாக அமைந்திருக்கிறார். அலட்டல் இல்லாத–அதேசமயம் அழுத்தமான போலீஸ் அதிகாரியாக அவர் வாழ்ந்திருக்கிறார். ‘‘உன் உடம்பில் போலீஸ் ரத்தம்தானே ஓடுது...சுடுடா...’’ என்று கடைசி காட்சியில் விமலை சமுத்திரக்கனி தூண்டி விடும்போது, தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.
எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, ‘கும்கி’ அஸ்வின் ஆகிய நான்கு பேரும் கலகலப்பூட்டுகிறார்கள். கூலிப்படை தலைவனுக்கு துணை போகும் எம்.எஸ்.பாஸ்கர், அவனுடன் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியை ஒப்பிட்டு பேசுகிற காட்சியும், வசனமும் பொருந்தவில்லை.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது, ‘டைட்டில்.
Share from www.dailythanthi.com

Comments
Post a Comment